Keerai Mor Kulambu Recipe : கீரை வைத்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
எப்போதும் ஒரே மாதிரியான குழம்பு செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
உங்கள் வீட்டில் தயிர் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதில் சரியான மோர் குழம்பு செய்து சாப்பிடுங்கள். ஆனால் எப்போதும் போல் அல்லாமல் அதனுடன் கீரை மற்றும் சில மசாலாப் பொருட்கள் சேர்த்து கீரை மோர் குழம்பாக செய்து சாப்பிடுங்கள். இந்த சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் கீழே மோர் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: ஒன் டைம் பீட்ரூட்டில் இப்படி குழம்பு செஞ்சி சாப்பிடுங்க... ருசியா இருக்கும்!
கீரை மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப் (கெட்டியானது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1/2 ஸ்பூன்
ஊற வைத்த துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கீரை - 1/2 கட்டு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க.. குழம்பு காலியாகும்!
செய்முறை :
கீரை மோர் குழம்பு செய்ய முதலில் மிக்ஸி ஜாரில் தயிர், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், துவரம் பருப்பு, இஞ்சி, வெங்காயம், சீரகம், தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் அதில் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது கடாயில் அரைத்த தயிர் கழுவிய சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவுதான் கீரை மோர் குழம்பு தயார்.
இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D