1 கப் ஜவ்வரிசி போதும்! டேஸ்டியான இட்லி செய்யலாம்.. ரெசிபி இதோ!

Published : Oct 03, 2024, 06:00 AM IST
1 கப் ஜவ்வரிசி போதும்! டேஸ்டியான இட்லி செய்யலாம்.. ரெசிபி இதோ!

சுருக்கம்

Javvarisi Idli Recipe : ஜவ்வரிசி வைத்து சுவையான இட்லி செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி செய்ய போறீங்களா? வீட்டில் உள்ளவர்களுக்கு அரிசி மாவு இட்லி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அப்படியான அவர்களுக்கு வித்தியாசமான சுவையில் ஜவ்வரிசி வைத்து இட்லி செய்து கொடுங்கள். இந்த இட்லி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த இட்லி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சுலபமாக செய்து முடித்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த இட்லி இருக்கும் சரி வாங்க இப்போது இந்த பதிவில் ஜவ்வரிசி இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  காலை டிபனுக்கு சத்தான வெஜிடபிள் இட்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க!

ஜவ்வரிசி இட்லி செய்ய தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 1 கப்
ஜவ்வரிசி - 1 கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உளுந்து - 1/2 கப்
சீரகம் - 1 ஸ்பூன் (வறுத்து பொடித்தது)
வேர்க்கடலை - 1 ஸ்பூன் (வறுத்து பொடித்தது)
உருளைக்கிழங்கு - 1 கப் (வேகவைத்து துருவியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
துருவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
சமையல் சோடா - 1 சிட்டிகை

இதையும் படிங்க:  இட்லி மாவு இல்லாத நேரத்துல இந்த இட்லி செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்.. ரெசிபி இதோ!!

செய்முறை :

ஜவ்வரிசி இட்லி செய்ய முதலில், ஒரு பெரிய பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து அதில் தண்ணீரை நன்கு கழுவி வடிகட்டி கொள்ளுங்கள். அரிசி வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சுமார் 4 மணி நேரம் ஊற வைத்து இதனுடன் ஜவ்வரிசி சேர்த்து நன்கு அரைத்து, பின் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். 

அதன்பிறகு அந்த மாவில் சீரகம், வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், மிளகுத்தூள், இஞ்சி கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைக்கவும். பின் இட்லி தட்டு குழிகளில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையில் ஜவ்வரிசி இட்லி ரெடி. இந்த இட்லியுடன் சாம்பார், சட்னி வைத்து சாப்பிட்டு சுவை அருமையாக இருக்கும். 

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுக்கு பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Best Place: பட்ஜெட் கவலை இல்லை, பாதுகாப்பு உறுதி! சோலோ டிராவலர்களுக்கான டாப் இடங்கள்.!
Healthy Breakfast: டைம் இல்லையா? 5 நிமிஷத்தில் செய்யலாம் ஹெல்தி காலை உணவு!