கத்தரிக்காயில் இப்படி கிரேவி செஞ்சு கொடுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க!

By Kalai SelviFirst Published Sep 30, 2024, 3:07 PM IST
Highlights

Kathirikai Gravy Recipe : இந்த பதிவில் கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று மதியம் வித்தியாசமான சபையில் ஏதாவது சைடு டிஷ் சாதத்திற்கு வைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கத்தரிக்க அதிகமாக இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை கொண்டு சுவையான கத்தரிக்காய் கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த கத்தரிக்காய் கிரேவி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாகவும் ,செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை என அனைவர் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த கத்தரிக்காய் கிரேவியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கு கூட வைத்து சாப்பிடலாம். கத்தரிக்காயை விரும்பி சாப்பிடாதவர்கள் கூட இப்படி கிரேவி செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  கத்தரிக்காய் சாதம் சாப்பிடு இருக்கீங்களா? ட்ரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ!

Latest Videos

கத்தரிக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 7 (கீறியது)
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 3/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெங்காயம் - 1/4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
புளி கரைசல் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு...

வேர்க்கடலை - 1 கைப்பிடி
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
வெந்தயம் - 3/4 ஸ்பூன்
எள்ளு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1 
பூண்டு - 5
இஞ்சி - 1 
தக்காளி - 1
எண்ணெய் - சிறிதளவு

இதையும் படிங்க:  இப்படி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செய்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!

செய்முறை :

கத்தரிக்காய் கிரேவி செய்ய முதலில், ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வேர்க்கடலை, சீரகம், சோம்பு, வெந்தயம், எள், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அவற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். இப்போது அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த கத்தரிக்கையை சேர்த்து அதன் தோல் சுரும்பும் வரை வதைக்கு தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். 

அதன் பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் அடுத்ததாக அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடுங்கள். பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து புளிக்கரைசலை சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இறுதியாக தக்காளியை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் ருசியான கத்தரிக்காய் கிரேவி தயார். 

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!