வீட்ல கொத்தமல்லி அதிகமா இருந்தா இப்படி ஒருமுறை சாதம் செஞ்சி சாப்பிடுங்க.. ருசியா இருக்கும்!

Published : Oct 03, 2024, 02:37 PM ISTUpdated : Oct 03, 2024, 02:42 PM IST
வீட்ல கொத்தமல்லி அதிகமா இருந்தா இப்படி ஒருமுறை சாதம் செஞ்சி சாப்பிடுங்க.. ருசியா இருக்கும்!

சுருக்கம்

Kothamalli Sadam Recipe : அனைவரும் விரும்பி சாப்பிடும் ருசியான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக உணவின் சுவையை கூட்டுவதற்காக கொத்தமல்லியை குழம்பில் நறுக்கி போடுவார்கள். இது தவிர, அதில் சட்டினி, துவையல் வைத்து சாப்பிடுவார்கள். இதை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் இப்படி சுவை மிகுந்த இந்த கொத்தமல்லியில் சாதம் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். நீங்கள் இதுவரை இந்த ரெசிபி செய்ததில்லை என்றால் ஒரு முறை கண்டிப்பாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். இந்த ஒரு ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் முட்டைக்கோஸில் இப்படி செஞ்சி கொடுங்க.. கொஞ்சம் கூட மிஞ்சாது!

கொத்தமல்லி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
கொத்தமல்லி இலை - 2 கட்டு
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 10
பெருங்காயம் - தேவையான அளவு
புளி - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
வறுத்த வேர்க்கடலை - 10
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: கத்தரிக்காய் சாதம் சாப்பிடு இருக்கீங்களா? ட்ரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ!

செய்முறை :

கொத்தமல்லி சாதம் செய்ய முதலில், கொத்தமல்லியை தண்ணீரில் கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊட்டி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வத்தல், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கிரும் அதில் இஞ்சி குடி விழுந்து சேர்த்தது அதன் பச்சை வாசனை போகும் வரை வைக்கவும். அடுத்ததாக அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி நன்றாக வெந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுது சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவை தொக்கு பதத்திற்கு வந்தவுடன் வடித்து வைத்து சாதத்தை இதில் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கொத்தமல்லி சாதம் ரெடி.

இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Special Tea : குளிர்க்காலத்துல இப்படி 'டீ' போட்டா சுவையோட 'நோய் எதிர்ப்பு சக்தியும்' அதிகரிக்கும்..
Holiday Depression : விடுமுறையா இருந்தாலும் மன அழுத்தமா? இதை மட்டும் செய்ங்க; நிச்சய பலன் உண்டு