பேத்தியை கையில் ஏந்தி ஆசையாக கொஞ்சும் அம்பானி!! தாத்தாவின் பாசமழையில் நனையும் ஆதியா.. வைரலாகும் வீடியோ..!!

Published : Jun 06, 2023, 12:34 PM ISTUpdated : Jun 06, 2023, 01:11 PM IST
பேத்தியை கையில் ஏந்தி ஆசையாக கொஞ்சும் அம்பானி!! தாத்தாவின் பாசமழையில் நனையும் ஆதியா.. வைரலாகும் வீடியோ..!!

சுருக்கம்

இஷா அம்பானியின் மகளான ஆதியாவை முகேஷ் அம்பானி கொஞ்சும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. அதில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி ஆகிய இருவரும் இரட்டையர்கள். கடைசியாக ஆனந்த் அம்பானி. இதில் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தா என்பவருடன் திருமணமாகி பிரித்வி என்ற ஆண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் தற்போது இத்தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் ஷ்லோகா மேத்தாவின் குழந்தையை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு அம்பானி, இஷா அம்பானி, இஷா அம்பானியின் கணவர் மற்றும் இஷாவின் இரட்டைக் குழந்தைகளான கிருஷ்ணா மற்றும் ஆதியா ஆகியோர் வந்தனர். அப்போது இஷா அம்பானியின் மகள் ஆதியாவுடன் முகேஷ் அம்பானியின் அன்பான தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: குடியரசு தலைவருக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது! பிரதமர் மோடி வாழ்த்து!

அதில் முகேஷ் அம்பானி ஆதியாவை தனது கைகளில் வைத்திருப்பதைக் காணலாம். முகேஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆதியா ஆகியோர் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர். இவர்களுடன் ஆகாஷ் அம்பானி தனது மகன் பிருத்வியை கையில் ஏந்தியபடி நின்றிருந்தார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்