World Environment Day: இனி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கணும்.. வேற வழியில்ல! உலக சுற்றுச்சூழல் தினம் இன்று!!

Published : Jun 05, 2023, 09:50 AM IST
World Environment Day: இனி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கணும்.. வேற வழியில்ல! உலக சுற்றுச்சூழல் தினம் இன்று!!

சுருக்கம்

சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.    

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அதை பராமரிப்பதற்கான நமது பொறுப்பை நினைவூட்டுவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இயற்கையை மனிதன் பாதுகாப்பதை விடவும் அதை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நலம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மனிதன் தேர்ந்தெடுக்காமல் போனால் எதிர்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் அபாயகரமானதாக இருக்கும். 

சங்கால தமிழர்கள் இயற்கையை அடிப்படையாக கொண்ட வாழ்க்கையே மேற்கொண்டனர். ஆனால் தேவைகள் பெருகும்போது இயற்கையின் அழிவும் அதிகமாகிவிட்டது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் மூலமும், சுற்றுச்சூழலுக்கு பாதகம் இல்லாத நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும் நம்மால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். 

என்னென்ன செய்ய வேண்டும்? 

நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் மரங்களை நடுவது, கழிவுகளை குறைப்பது அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஆதரிப்பது போன்ற ஒவ்வொரு சிறிய அடியும் முக்கியமானதே. உலக சுற்றுச்சூழல் தினம் தனிநபரையும், சமூகத்தையும் மாற்றங்களை செய்ய வலியுறுத்துகிறது. 

உலக சுற்றுச்சூழல் தினம் 2023 கருப்பொருள்; 

உலக சுற்றுச்சூழல் தினம் 2023 இன் கருப்பொருளாக #BeatPlasticPollution எனப்படும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கையாள்வதற்கான அவசர நோக்கத்தில் இந்தாண்டு கவனம் செலுத்தப்படுகிறது. 

பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்கும் தீர்வுகள்: 

பிளாஸ்டிக் மாசுபாடு ஒவ்வொரு சமூகத்தையும் பாதிக்கும் ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலாக உள்ளது. டன்கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யாமல் பூமியின் மீது உள்ளன. இவை மண் வளத்தை கெடுப்பதோடு புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாக அமைகிறது.   

பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை புறக்கணிக்கவே முடியாது. இதற்கு உடனடி நடவடிக்கை தேவை. அதே நேரத்தில், இதற்கு வலுவான தீர்வுகள் தேவை. இந்த சுற்றுச்சுழல் தினத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். முடிந்தவரை பாலீத்தீன் கவர்கள், அவசியமில்லா பிளாஸ்டிக் பொருள்களை வாங்குவதை தவிர்ப்போம். சுற்றுச்சூழலை காப்போம். 

இதையும் படிங்க: நம்ம முன்னோர் சாப்பிட்ட சோளத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா!! அத கட்டாயம் சாப்பிட வேறென்ன காரணம் வேணும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க