ஜூன் மாதத்திற்கும், ரொட்டிக்கும் ஒரு ருசிகரமான வரலாறு உள்ளது. அந்த வரலாற்று பின்னணியை இங்கு அறிந்து கொள்ளலாம்.
ஜூன் மாதம் என்றால் சாதாரணமான மாதம் என்றாலும் அதில் சில ருசிகர சம்பவங்கள் நடந்துள்ளன. சரித்திரங்களை புரட்டி போடும் பெரிய பெரிய வரலாற்றாசிரியர்கள் கூட தங்களுடைய எழுத்து குறிப்புகளில் '2 ஜூன் ரொட்டி' என குறிப்பிட்டுள்ளனர். பல எழுத்தாளர்கள் தங்கள் கதையில் '2 ஜூன் ரொட்டி' என எழுதுகின்றனர்.
உண்மையில் ஜூனுக்கும் ரொட்டிக்கும் என்னதான் சம்பந்தம்... முன்பு இந்தியாவில் பணவீக்கம் இருந்துள்ளது. அப்போது இருப்பவன் பசியாறியிருக்கிறான். அதாவது பணக்காரர்கள் வயிறார சாப்பிட்டுள்ளார்கள். ஆனால் ஏழைகளோ 2 ரொட்டி கூட இல்லாமல் பசியோடு அவதிப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கு 2 நாள்களுக்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை என்ற பசித்த வாக்கியங்களை தான் பலரும் 2 ஜூன் கி ரொட்டி என சொல்கின்றனர். இது ஏழைகளின் பசியில் பிறந்த வார்த்தைகள்.
அவதி மொழியில் ஜூன் என்றால் நேரம் என அர்த்தம். இரண்டு ஜூன் ரொட்டி என்றால் (2 ஜூன் கி ரொட்டி) இரண்டு நேர ரொட்டி என்று அர்த்தம் கொள்ளலாம். இதை காலை, மாலை ஆகிய இருவேளையின் உணவு என்று புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு நபருக்கு இருவேளை உணவு கிடைத்தால், அதை 2 ஜூன் ரொட்டி என சொல்கிறார்கள். ஒருவேளை சிலருக்கு அது கூட கிடைக்காமல் இருக்கலாம். அப்படி கிடைக்காதவரை குறித்து இரண்டு ஜூன் ரொட்டி கூட கிடைக்காது என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த 5 பொருள்ல ஒன்னு உங்க வீட்ல இருந்தாலும் வற்றாத பணம் இருக்கும்ங்கிறது ஐதீகம்!!
நேற்று ஜூன் 2ஆம் தேதி. ஆகவே ஜூனும் ரொட்டியும் மீண்டும் டிரெண்ட் ஆகிவிட்டன. ஜூன் மாதத்தில் வெப்பமும் அதிகமாக காணப்படும் என்பதால் விவசாயிகள், ஏழைகளுக்கு கடினமான காலமாக இருக்கும். அவர்கள் உழைத்து சோர்ந்திருக்கும் போது அந்த உழைப்பின் பலனாக அவர்களுக்கு உணவாக ரொட்டி கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த பழமொழி 600 வருடங்களாக இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் இந்த "ஜூன் கி ரொட்டி" வடமாநிலத்தில் தான் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vastu Tips: வீட்டுல செல்வம் குவியணுமா? வாழை மரம் இப்படி வச்சு பாருங்க!! உங்களுக்கான வாஸ்து டிப்ஸ்!!