இப்போதைக்கு "வெங்காயம்" தான் பெரும் பிரச்சனை..! மக்களவையில் பலமாக வாய்ஸ் கொடுத்த கனிமொழி...!

By ezhil mozhiFirst Published Nov 28, 2019, 5:47 PM IST
Highlights

வெங்காய விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அரசு வெங்காயத்தின் அவசியத்தை உணர்ந்து விலையக் கட்டுக்குள் வைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.

இப்போதைக்கு "வெங்காயம்" தான் பெரும் பிரச்சனை..! மக்களவையில் பலமாக வாய்ஸ் கொடுத்த கனிமொழி...!  

அதிவேகமாக உயர்ந்துகொண்டிருக்கும்  வெங்காய விலையைக் கட்டுப்படுத்துமாறு மத்திய அரசுக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்  கனிமொழி  வலியுறுத்தியுள்ளார்.

Latest Videos

வெங்காய விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அரசு வெங்காயத்தின் அவசியத்தை உணர்ந்து விலையக் கட்டுக்குள் வைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான்கு மடங்கு கூட அதிகமாகியிருக்கிறது. இதனால் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் குடும்பங்கள் கடுமையான சிக்கலை சந்திக்கின்றன. அவர்களால் உணவுத் தேவையின் முக்கிய அங்கமான வெங்காயத்தை வாங்க முடியவில்லை. தமிழ்நாடு, டெல்லி, மும்பை  என நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது.

சட்ட விரோதமாக வெங்காயம் பதுக்கப்படுவதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும்  இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக  வர்த்தக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும், தேசிய விவசாயக் கூட்டுறவு வாணிபக் கழகம் வெங்காயத்தை  கிடங்குகளில் பாதுகாப்பதில் பாரம்பரியமான முறையையே பின்பற்றுவதால் சேமிக்கப்பட்ட வெங்காயத்தின் பெரும்பகுதி  வீணாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பின்னரும் கூட வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நாட்டில் பெரிய பிரச்சனையாக வெங்காய விலை உயர்வு இருக்கும்போது, மத்திய அரசு வெங்காய விலையைக் கட்டுப்படுத்த என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். இதற்காக குறுகிய கால விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!