லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் - அரசு அலுவலகங்களில்..! 62% சதவீத மக்கள் பகீர் கருத்து..!

By ezhil mozhiFirst Published Nov 28, 2019, 5:08 PM IST
Highlights

நகராட்சி மற்றும் மாநகராட்சி பணிகளுக்காக 19 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் அடிக்கடி லஞ்சம் கொடுத்ததாக 35 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் - அரசு அலுவலகங்களில்..! 62% சதவீத மக்கள் பகீர் கருத்து..!  

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தை முன் வைத்துள்ளனர். அதாவது கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஓர் கருத்துக்கணிப்பில் 5 ஆயிரத்து 700 பேர் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்த ஒரு கருத்துக்கணிப்பை சர்வதேச வெளிப்படைத்தன்மை என்ற ஒரு அமைப்பு தமிழகத்தில் நடக்கக்கூடிய லஞ்சம் குறித்து நடத்தியது. 

இதில் குறிப்பாக 62% பேர், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்துள்ளதாகவும் அவ்வாறு கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்றும் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாகவும், அதிலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் தான் அதிக அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், குறிப்பாக 41 சதவீதம் பேர் இதனை தெரிவித்து உள்ளனர்.

நகராட்சி மற்றும் மாநகராட்சி பணிகளுக்காக 19 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் அடிக்கடி லஞ்சம் கொடுத்ததாக 35 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் எந்த பணியும் நடக்கிறது என 8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் 30% பேர் லஞ்சம் கொடுக்காமலேயே அரசு வேலைகளை பெற்றுக் கொள்வதாகவும், போக்குவரத்து விதிமீறல்களில் சிக்குபவர்கள் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து தப்பிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 

ஒருவேளை இலஞ்சம் கொடுக்க விருப்பமில்லை என்றாலும் வழக்கு அபராதம் உள்ளிட்ட காரணத்தை வைத்து பார்க்கும்போது லஞ்சத்தை விட அதிக பணம் எடுத்துக் கொள்ளும், நேரத்தை வீணடிக்கும் என்பதால் அதற்கு லஞ்சம் கொடுத்துவிட்டு செல்வதே சிறந்தது என முயற்சிப்பதாகவும் 15 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்

இந்தியாவிலேயே அதிகமாக உத்தர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகா ராஜஸ்தான் ஜார்கண்ட் பஞ்சாப் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தான் அரசு அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாகவும், குஜராத் மேற்கு வங்காளம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் லஞ்சம் வாங்குவது மிக குறைவாக உள்ளது என்ற நல்ல ஒரு தகவலும் கிடைத்துள்ளது.

ஆனால் குறிப்பாக தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதாக இருந்தால் லஞ்சம் கொடுத்தால்தான் முடியும்  என 62 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

click me!