National Pension Scheme : பணி ஓய்வு பெற்ற பிறகு தனி நபர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தை கொண்டு ஒரு அமைதியான வாழ்க்கையை மன நிறைவோடு வாழ கை கொடுக்கிறது தேசிய ஓய்வூதிய திட்டம்.
மத்திய அரசு அமல்படுத்திய இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து வரும் ஊழியர்கள் முதலீடு செய்து பயனடையலாம். முதலீடு என்பது ஒரு மனிதனுக்கு அவன் சிறு வயது முதலையே கற்றுத்தரப்பட வேண்டிய ஒரு தலையாகிய குணம் என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு சேமிப்பு தான் தன்னையும், தன்னை சார்ந்து உள்ளவர்களுடைய எதிர்காலத்தையும் நிர்ணயிக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல. குறிப்பாக எதிர்காலத்தை நினைத்து வருத்தம்கொள்ளும் அனைவரும் கட்டாயம் ஒரு சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்து வந்தால், தங்களுடைய பணி ஓய்வு காலத்தை நல்ல முறையில் நடத்த முடியும்.
undefined
மாதம் தோறும் கிடைக்கும் நிரந்தர வருமானம்.. போஸ்ட் ஆபிசின் அருமையான திட்டம்..
அந்த வகையில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நேஷனல் பென்ஷன் ஸ்கீம் மூலம் எப்படி பணத்தை சேமித்து ஓய்வு காலத்தை நல்ல முறையில் செலவிடலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒருவர் தனது 60-வது வயது வரை அல்லது முதலீடு செய்ய முடியும். சரி 60 வயதிற்கு பிறகு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெற விரும்பினால் அவர் இந்த திட்டத்தில் என்ன செய்யவேண்டும்?.
அவர் தனது 25 வது வயது முதல் பணத்தை சேமிக்க வேண்டும், என்பிஎஸ் திட்டத்தில் மாதாந்திரமாக ரூபாய் 12,000 சேமித்து வந்தால், 35 ஆண்டுகளில் அவரால் சுமார் 45 லட்சம் ரூபாயை சேமிக்க முடியும். இதன் மதிப்பீட்டு வருமானம் சுமார் 10 சதவீதம், முதிர்வுக்கான தொகையானது சுமார் 4 கோடி ரூபாயாக இருக்கும். இதில் வருடாந்திர தொகை 45 சதவீதம் 2 கோடி, மதிப்பிடப்பட்ட வருடாந்திர விகிதம் 6% என்றால் 60 வயதில் மாதாமாதம் ஓய்வூதியமாக மாதம் 1.7 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைக்கும்.