- Home
- Gallery
- டிசம்பர் 31 தான் கடைசி.. அதிரடி மாற்றத்தை எதிர்கொள்ளும் UPI பரிவர்த்தனைகள் - நீங்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!
டிசம்பர் 31 தான் கடைசி.. அதிரடி மாற்றத்தை எதிர்கொள்ளும் UPI பரிவர்த்தனைகள் - நீங்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!
UPI Payment Update : எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த உலகில் பணபரிவர்தனைகளும் தற்பொழுது டிஜிட்டல் முறையில் மாறி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் பல லட்சம் மக்கள் UPI பேமெண்ட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

UPI Payment Update
இந்திய அரசும் இந்த வகை UPI பேமெண்ட்டுகளை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வரும் இந்த சூழ்நிலையில் அண்மையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இந்த UPIகளை 5 லட்சம் ரூபாய் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்ற வரம்பை அதிகரித்து உத்தரவிட்டிருந்தது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த மாற்றத்தினால் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளதாக பல கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாதம் தோறும் கிடைக்கும் நிரந்தர வருமானம்.. போஸ்ட் ஆபிசின் அருமையான திட்டம்..
UPI Transaction
முன்னதாக ஒரு யுபிஐ பேமென்ட்டின் வரம்பு என்பது ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் வருகின்ற டிசம்பர் 31ம் தேதியோடு யுபிஐ பேமென்ட்களில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. GPay, போன் பே போன்ற பல யுபிஐ பேமென்ட் செயலிகளை பயன்படுத்தும் அனைவருக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
UPI Payment Apps
டிஜிட்டல் முறையில் பண பரவுவதனை நடக்கும் அதே நேரம் இதில் அதிக அளவிலான மோசடிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே இதனை முழுமையாக தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி இனி 5000 ரூபாய்க்கு மேல் உள்ள தொகையை நீங்கள் தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மாற்றும் பொழுது குறிப்பிட்ட அந்த எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது அழைப்பின் மூலமாகவோ ஒரு அறிவிப்பு வழங்கப்படும்.
அந்த அறிவிப்பை ஏற்று உரிய அந்த நபர் அங்கீகரித்தால் மட்டுமே அந்த பேமென்ட் இனி செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக செல்லுபடியாகாமல் இருக்கும் UPI payment கணக்குகளை சரிபார்க்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.