இந்த இடங்களில் மச்சம் இருக்கா...? அப்போ நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி..!

 
Published : Jul 29, 2018, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
இந்த இடங்களில் மச்சம் இருக்கா...? அப்போ நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி..!

சுருக்கம்

mole in this place your are so lucky

மச்சம் என்பது நம் உடலில் இருக்கும் ஒரு சிறு கரும்புள்ளி. ஒரு சிலருக்கு மிகவும் பெரிய அளவில் கூட காணப்படும். இவர் உடலில் இயற்கையாகவே தோன்றக்கூடியவை. சிலருக்கு பிறக்கும்போதே மச்சங்கள் இருக்கும். ஆனால் சிலருக்கு  திடீரென உண்டாகும். உடலில் மச்சங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். 

இப்படி தோன்றும் மச்சங்கள் சில அதிர்ஷ்டமானதாக பார்க்கப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக, இந்த 5 இடங்களில் மச்சங்கள் இருந்தால் அதிர்ஷ்டத்தைத் தரும் என மச்ச சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

எந்தெந்த இடங்களில் மச்சங்கள் இருந்தால் அதிர்ஷ்டம் என பார்க்கலாம் வாங்க..!

ஆண்களுக்கு வலது புறத்திலும் பெண்களுக்கு இடதுபுறமும் மச்சம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நெஞ்சில் மச்சம் : 

நெஞ்சத்தில் மச்சம் உள்ளவர்கள் சுகமான வாழ்க்கை உள்ளவர்கள். இவர்களுடைய காந்தப் பார்வையால் எல்லோரையும் வேகமாகக் கவர்ந்துவிடுவார்கள் என்றும் படிப்பு, மற்றும் வேலையில் சிறந்து விளங்குவார்கள். அறிவுப்பூர்வமாக யோசித்து எதையும் செய்யக் கூடியவர்கள். தொலைநோக்கு சிந்தனை அதிகம் கொண்டவர்கள். மன தைரியம் உடையவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

உள்ளங்காலில் மச்சம் : 

உள்ளங்காலில் மச்சம் இருப்பவர்கள் மிகுந்த புகழ் உடையவர்களாக இருப்பார்கள். கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். சங்கீத்தில் ஈடுபாடு உடையவராக இருப்பார்கள். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பார்கள். அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள்.

உள்ளங்கை மச்சம் :

 

புத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை செல்வச் செழிப்புடன் இருக்கும். உயர் பதவியை அடைவார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் அளவான நிறைவான வாழ்க்கையையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நினைத்ததை நடத்தி முடிப்பவர்கள் இவர்கள்.

தொப்புளில் மச்சம் : 

நினைத்த வாழ்க்கையை அடைவார்கள். உழைத்து வாழும் எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு வசதி, வாய்ப்புகள் தானே தேடி வரும். இவர்களின் பேச்சாலேயே அனைவரையும் கவரக் கூடியவர்கள்.

முதுகில் மச்சம் : 

முதுகுப் பகுதியில் மச்சம் கொண்டவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும். மன நிறைவுடனும் பக்தியுடனும் வாழ்க்கையை வாழ்பவர்கள். நல்ல சுற்றுச்சூழலில் வாழ்வார்கள். அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவர்கள். பணச்சேர்க்கையில் தட்டுப்பாடே இருக்காது. உயர்வான வாழ்க்கையும் செல்வச் செழிப்பும் அதிகமாக இருக்குமாம் இவர்களிடம்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்