
இந்த ஒரே ஒரு பானம் ஒரே நாளில் இத்தனை நோய்களை விரட்டுதாம்...!
பனைகளின் பாளைகளை சீவி, அதன் நுனியில் இருந்து வடியும் நீரை சுண்ணாம்பு தடவிய பானையில் சேகரிக்கும் தான் பதநீர்.
இந்த பதநீரால் ஏராளமான நன்மைகள் உண்டு..!
சிறுநீரக தொடர்பான பிரச்சனை
வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு
உடல் மெலிந்த நபர்களுக்கு இது மிக சிறந்த ஊக்கத்தை அளிக்கும்
இதேபோன்று,பழைய கஞ்சியுடன் பதநீரை சேர்த்து, அதனை புளிக்க வைத்து ஆறாத புண்கள் மற்றும் கொப்பளங்கள் சில நாட்கள் தடவி வர விரைவில் குணமடையும்
சுண்ணாம்பு சேர்ப்பதால், உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும்.
உடலுக்கு குளிர்ச்சியை தந்து, வெப்பத்தை வெளிப்படுத்தும். அதுமட்டுமில்லாமல், மலச்சிக்கல் போக்கும் . வயிறு தொடர்பான அனைத்து பிரச்னையும் சரியாகி விடும்.
மஞ்சளை பொடித்து, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து பதநீரில் கலக்கி வந்தால் தொண்டைப்புண், வாய் புண், வயிற்றுப்புண் என அனைத்தும் சரியாகி விடும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.