நண்பனுக்கு "மைனஸ் 3 புள்ளி"... மோடிக்கு 68 புள்ளி..! கொரோனா கட்டுப்படுத்துவதில் "மோடி" தான் மாஸ் !

By ezhil mozhi  |  First Published Apr 24, 2020, 5:10 PM IST

தொடர்ந்து மனித குலத்திற்கு பெரும் சவாலாக இருக்கக்கூடிய வைரசால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற ஒரு தருணத்தில் இந்தியாவிலும் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 


நண்பனுக்கு "மைனஸ் 3 புள்ளி"... மோடிக்கு 68 புள்ளி..!  கொரோனா கட்டுப்படுத்துவதில் மோடி தான் மாஸ் ! 

உலகம் முழுவதும் சுமார் 210 க்கும் அதிகமான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதனுடைய கோரத்தாண்டவம் பார்க்க முடிகிறது.

Latest Videos

தொடர்ந்து மனித குலத்திற்கு பெரும் சவாலாக இருக்கக்கூடிய வைரசால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற ஒரு தருணத்தில் இந்தியாவிலும் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும் ஆரம்ப காலகட்டத்திலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பிறகு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஒரு நிலையில் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் இரண்டாவது முறையாக 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மொத்தம் 40 நாட்கள் என வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்க சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார் யார் என்பது குறித்து மார்னிங் கன்சல்ட் என்ற சர்வதேச நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி தரவரிசைப் பட்டியலை தயார் செய்தது. அதில் 68 புள்ளிகளை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்திலும் அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேட்டர் இரண்டாவது இடத்தையும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் 35 புள்ளிகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதில் உற்று நோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் வல்லரசு நாடான அமெரிக்கவின் அதிபரும், பிரதமர் மோடியின் நண்பருமான டிரம்ப் மைனஸ் 3 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்தார். பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகள் பெற்று 9 ஆவது இடத்திலும், ஜப்பான் பிரதமர் ஷிங்கே அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10 ஆவது இடமும் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின்  புகழ் மேலும் அதிகரித்து, உலக அளவில் பெரும் தலைவராக உருவெடுத்து உள்ளார்.
 

click me!