முழு ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாட்டில் "5 மாநகராட்சிகள் ".! மக்களுக்கு எது கிடைக்கும்? கிடைக்காது?

By ezhil mozhi  |  First Published Apr 24, 2020, 3:24 PM IST

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவ துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும்.


முழு ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாட்டுல் "5 மாநகராட்சிகள் ".! மக்களுக்கு எது கிடைக்கும்? கிடைக்காது?

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஐந்து மாநகராட்சிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மக்களுக்கு எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? எந்தெந்த சேவைகள் கிடைக்காது என்பதை பார்க்கலாம்.

Latest Videos

அதன்படி சென்னை கோவை மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் புதன் வரையிலும், சேலம் மற்றும் திருப்பூரில், ஞாயிறு முதல் செவ்வாய் கிழமை வரையிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஐந்து மாநகராட்சி தவிர பிற இடங்களில், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், 

சென்னை கோயம்புத்தூர் மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26ஆம் தேதி ஞாயிறு முதல் 29ஆம் தேதி புதன்கிழமை இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும். சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26ஆம் தேதி ஞாயிறு முதல் 28 ஆம் தேதி செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் 

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவ துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும்.

தலைமை செயலகம், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை காவல் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மின்சாரத் துறை ஆவின் உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்

இதர மத்திய அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிடம் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அம்மா உணவகங்கள் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள்(ATM ) வழக்கம்போல் செயல்படும்.

உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். முதியோர் மாற்றுத் திறனாளி ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

ஆதரவற்றோருக்கு ஆக மாவட்ட நிர்வாகம் சமூகநலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும் ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் அதேபோல் காய்கறி பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும் மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்றும் பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி, வெளியில் வருபவர்களின் வாகனகங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!