காணாமல் போன ரூ.8 கோடி மதிப்புள்ள நாய்... கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்..!

Published : Dec 23, 2019, 06:32 PM IST
காணாமல் போன ரூ.8 கோடி மதிப்புள்ள நாய்... கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்..!

சுருக்கம்

8 கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நாயை காணவில்லை அதை கண்டுபிடித்து தரவேண்டும் என பெங்களூருவில் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள அனுமந்த நகர் காவல் நிலையத்துக்கு வந்த ஒருவர் தன் நாயை காணவில்லை என புகார் கொடுத்தார். புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறையினர் நாயின் மதிப்பை கேட்டு அதிர்ந்து போனார்கள். தன்னுடைய நாயின் விலை ரூ.8 கோடி என்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய் இனம் என்றும் அவர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தன் நாயை யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த சேதன் என்பவரே நாயைக் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். தன்னுடைய  நாய் அலஸ்கான் மலமூட் இன நாய் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து அதனை இறக்குமதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாயின் மதிப்பு 8 கோடி ரூபாய் என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்களுக்கு கூட இப்படியொரு மதிப்பு இருக்குமா என்பது சந்தேகமே.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்