டிடி- யின் வேறு லெவல் மாஸ் புகைப்படங்கள்..! நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

thenmozhi g   | Asianet News
Published : Dec 23, 2019, 06:06 PM IST
டிடி- யின் வேறு லெவல் மாஸ் புகைப்படங்கள்..! நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

டிடி- யின் வேறு லெவல் மாஸ் புகைப்படங்கள்..! நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 

டிடி- யின் வேறு லெவல் மாஸ் புகைப்படங்கள்..! நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார்

திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை வெற்றி அடைந்தன. 

ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித் த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அண்மையில் கூட என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் டிடி தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்து செய்த டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் ஒரு பேட்டி ஒன்றில் முதன் முறையாக அதற்கான காரணத்தை மனம் திறந்து கூறினார்.

அதாவது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க கூடாது என்றும், எந்த படத்திலும் நடிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். ஆனால் அதனை டிடி கேட்கவில்லை. அது மட்டுமல்லாமல் டிடி க்கு ஏராளமான ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் இருந்ததாலும் தான் அவரை விவாகரத்து செய்ததாக ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்த ஒரு நிலையில், நாளுக்கு நாள் டிடி யின் அழகும் சரி, அவர் செய்யும் சேட்டையும் சரி அதிகரித்து வருகிறது என டிடி-யின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு நிலையில் கண்ணை கவரும் பச்சை நிறத்தில் மிக அழகிய ஆடை அணிந்து ஹீரோயின்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மிக அழகாக இருக்கிறார் டிடி என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்