திருமணம் செய்துக்கொண்ட இரண்டு அழகிகள்… காதல் மற்றும் திருமண வீடியோ வைரல்!!

Published : Nov 03, 2022, 06:33 PM ISTUpdated : Nov 03, 2022, 06:36 PM IST
திருமணம் செய்துக்கொண்ட இரண்டு அழகிகள்… காதல் மற்றும் திருமண வீடியோ வைரல்!!

சுருக்கம்

அர்ஜென்டினா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அழகு ராணிகளான மரியானா வரேலா மற்றும் ஃபேபியோலா வாலண்டைன் இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு, தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அர்ஜென்டினா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அழகு ராணிகளான மரியானா வரேலா மற்றும் ஃபேபியோலா வாலண்டைன் இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு, தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர். இதுக்குறித்து அவர்கள் வெளியிட்ட வீடியோவில் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் இருவரும் அக்டோபர் 28 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதுத்தொடர்பாக அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல், நிச்சயதார்த்தம் மற்றும் சில உணர்ச்சிகரமான தருணங்களின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியர்களுக்கு இதனால்தான் இதய நோய் என்ற கருத்துக்கு மாறாக புதிய ஆச்சரிய ஆய்வு முடிவு!!

வீடியோக்களில், அவர் தனது பல தருணங்களைக் காட்டியுள்ளார். வீடியோவில், இரண்டு அழகிகளும் ஒன்றாக விடுமுறையை கொண்டாடுவதும், ஒருவருக்கொருவர் ப்ரோபோஸ் செய்வதையும் காணலாம். இதுமட்டுமின்றி, அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிடுவதையும் காணலாம். அந்த வீடியோவைப் பகிர்ந்ததோடு எங்கள் உறவை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க முடிவு செய்த பிறகு, ஒரு சிறப்பு நாளில் (10/28/22) அவர்களுக்கு கதவுகளைத் திறந்தோம். இந்த வீடியோவை இதுவரை 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இருவரின் திருமணத்திற்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனலின் அதிகாரப்பூர்வ கணக்கில் புகைப்படத்தை வெளியிட்டு அழகு ராணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் வரும் இந்த மாதிரியான பதிலைப் பார்க்கும்போது, இப்போது சமூகமும் இந்த மாதிரியான திருமணத்தை மனம் திறந்து ஏற்றுக்கொள்வது போல் தெரிகிறது.

இதையும் படிங்க: மழை காலங்களில்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்!

ஊடகங்களின் அறிக்கைப்படி, மரியானாவும் ஃபேபியோலாவும் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 அழகுப் போட்டியின் போது சந்தித்தனர், இங்கிருந்து அவர்களின் காதல் கதை தொடங்கியது. இந்த ஜோடி பல மாடலிங் நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளது. இருவரும் தங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஒருவரையொருவர் கைப்பிடிக்க தயங்கவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அல்லது பெண்-பெண், ஆண்-ஆண் இடையேயான உறவு. ஒவ்வொரு உறவுக்கும் அன்பு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு தேவை. இந்த மூன்றும் மரியானா மற்றும் ஃபேபியோலில் காணப்படுகின்றன.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Teeth Stain : பற்களை மோசமாக்கும் கறைக்கு இந்த '5' தினசரி பழக்கங்கள் தான் காரணம்! உடனே நிறுத்துங்க
Powder vs Liquid: வாஷிங் மிஷின்ல துவைக்க எது சிறந்தது? பவுடரை மிஞ்சுமா லிக்குவிட்?!