ALERT : |தமிழகத்தில் "மின்னல் வேகத்தில்" பரவும் கொரோனா..! போட்டுடைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 24, 2020, 12:42 PM IST
ALERT : |தமிழகத்தில் "மின்னல் வேகத்தில்" பரவும் கொரோனா..! போட்டுடைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!

சுருக்கம்

இந்த ஒரு நிலையில் மக்கள் அனைவரும் அவரவர் தம்மை தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ALERT : |தமிழகத்தில் "மின்னல் வேகத்தில்" பரவும் கொரோனா..! போட்டுடைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்..!

கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் 500க்கும் அதிகமான பேர் பாதிப்பு அடைந்து உள்ளதும் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒரு நிலையில் மக்கள் அனைவரும் அவரவர் தம்மை தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அறிவுறுத்தப்பட்டு வந்த இந்த ஒரு விஷயம் தற்போது உத்தரவாக மாறி உள்ளது. காரணம் அந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவி வருவதே...

இந்த ஒரு நிலையில் மதுரையில் கொரோனா பாதித்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. நிலைமை இப்படி இருக்க மக்கள் அதுகுறித்த தீவிரம் தெரியாமல் பொதுவெளியில் நடமாடி வருவதும், அவரவர் சொந்த ஊருக்கு திரும்புவதுமாக இருக்கின்றனர். அதுவும் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதனையும் கடைபிடிக்காமல் இப்படி சுற்றித் திரிந்தால் நிலைமையை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொது மக்களாகிய நாம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற அவசர நிலை ஏற்பட்டு உள்ளது என்பதை உணர்தல் வேண்டும். இப்படி ஒரு நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் "மின்னல் வேகத்தில்" கொரோனா பரவுகிறது என குறிப்பிட்டு உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்