புதிய பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி பதில்கள் ..!

By ezhil mozhiFirst Published Jun 18, 2019, 1:49 PM IST
Highlights

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தற்போது உள்ளபடியே 6 பாடப்பிரிவுகள் அப்படியே தொடரும் என  பள்ளிகளைவித்துறை அமைச்சர் செங்கோட்டையயன் தெரிவித்து உள்ளார்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தற்போது உள்ளபடியே 6 பாடப்பிரிவுகள் அப்படியே தொடரும் என பள்ளிகளைவித்துறை அமைச்சர் செங்கோட்டையயன் தெரிவித்து உள்ளார்.

 

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்றும் உரிமம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் எனவும் தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை "தனியார் பள்ளிகள் மூடப்பட்டால் அது குறித்து கருத்து இப்போது தெரிவிக்க முடியாது. ஆனால் அரசு பள்ளிகள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மூடவில்லை என தெரிவித்து உள்ளார். 

ஒருவேளை, பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை இருந்தால் உடனே சரிசெய்யப்படும் என்றும் ஒரு சில பள்ளிகளில் தமிழ் புத்தகம் வழங்கப்பட வில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு 2 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும். பாட புத்தகங்கள் அனுப்புவதில் குறைபாடுகள் இருக்குமானால் உடனே சரிசெய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 

click me!