பதவி உயர்வு பெறுவதில் இப்படி ஒரு வில்லங்கம்...! நேர்மையானவர்களுக்கு நேர்ந்த கதி ..!

By ezhil mozhiFirst Published Jun 18, 2019, 1:16 PM IST
Highlights

தொலைதூர கல்வி மூலம் பட்டயப் படிப்பு முடித்து பதவி உயர்வு பெறுவதாகவும், இதனால் நேரடியாக பட்டம் பெற்றவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என மின்வாரிய ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொலைதூர கல்வி மூலம் பட்டயப் படிப்பு முடித்து பதவி உயர்வு பெறுவதாகவும், இதனால் நேரடியாக பட்டம் பெற்றவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என மின்வாரிய ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மின்வாரிய உதவி பொறியாளர் பணிக்கு தொலைதூர கல்வி மூலம் பட்டைய படிப்பு படித்தவர்கள் தேர்வு செய்யப்படுவதால் நேரடியாக கல்லூரியில் படித்தவர்களுக்கு பதவி உயர்வு  பெரும் வாய்ப்பு இல்லாமலேயே ஓய்வு பெறும் நிலை உண்டாகிறது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர், போர்மேன், லைன் மேன், கணக்கீட்டாளர், கமர்ஷியல் வணிக ஆய்வாளர் என பல்வேறு பிரிவுகள் உள்ளன.சொல்லப்போனால் 1986ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவின்படி மின்வாரியத்தில் மட்டும் ஒரு லட்சத்து 49 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் இதுவரை 86 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உதவி பொறியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பட்டய படிப்பு அதாவது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்...இந்த வேலையில்  அமர்த்தப்படுபவர்கள் உதவி பொறியாளர் பணி வரை பதவி உயர்வு பெற கூடிய வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இதற்காக டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு பிஇ ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து இருக்க வேண்டும். இவ்வாறாக பணிக்கு சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் இருக்க... இன்னொரு பக்கம் ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள டிப்ளமா படிப்புகள் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே..இங்கு தொலைதூரக் கல்வியை படித்துவிட்டு பின்னர் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ படிக்கின்றனர். நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்பை இரண்டே ஆண்டுகளில் முடித்துவிட்டு, பின்னர் தொலைதூர கல்வி மூலமாகவே பிஇ படிப்பையும் முடித்துவிட்டு மிக எளிதாக பதவி உயர்வை பெறுகின்றனர் இவர்கள்.

இதன் காரணமாக முறையாக கல்லூரிக்கு சென்று படித்தவர்கள், 50 வயதைக் கடந்தும் பதவி உயர்வைப் பெற முடியாமலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தொலைதூர கல்வி மூலம் பட்டயப் படிப்பு படித்துவிட்டு வேலைக்கு வந்திருப்பவர்கள், பதவி உயர்வு வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை ஊழியர்கள் முன்வைத்தள்ளனர்.

click me!