அடுத்தடுத்து அதிரடி காட்டும் அமைச்சர் செங்கோட்டையன்..! பள்ளி மாணவர்களை மலேசியா, சிங்கப்பூர், கனடா அனுப்ப முடிவு..!

By ezhil mozhiFirst Published Jan 30, 2019, 7:50 PM IST
Highlights

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். மாணவர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை காண்பித்து வருகிறார். இதற்கு முன்னதாக  பல அதிரடி திட்டங்களை அறிவித்து இருந்தாலும், தற்போது மேலும்  ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களை குஷிபடுத்தி உள்ளார். 

அடுத்தடுத்து அதிரடி காட்டும் அமைச்சர்  செங்கோட்டையன்..! பள்ளி மாணவர்களை மலேசியா, சிங்கப்பூர், கனடா அனுப்ப முடிவு..! 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். மாணவர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை காண்பித்து வருகிறார். இதற்கு முன்னதாக  பல அதிரடி திட்டங்களை அறிவித்து இருந்தாலும், தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களை குஷிபடுத்தி உள்ளார். 

அதாவது, பின்லாந்திற்கு கல்வி சுற்றுலா சென்று வந்த சில மாண்வர்களுடன் பேசி அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்த அமைச்சர், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து கல்வி சுற்றுலா அனுப்ப முடிவு செய்து உள்ளார்.

அதன் படி, மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மாணவர்களை கல்வி சுற்றுலா அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.
 
மேலும் ஆடிட்டர் ஆக வேண்டும் என்றால் மூன்றாண்டு பிகாம் படிப்பு முடித்தவுடன் மட்டுமே, அதற்கான பயிற்சியை பெரும் வகையில் இருந்தது. ஆனால் இனி வரும் ஆண்டுகளில் தகுதியின் அடிப்படையில் 5000  மாணவர்களை தேர்வு செய்து, ஆடிட்டர் ஆவதற்கான பயிற்சியை12 ஆம் வகுப்பு முடித்த உடனே அதற்கான பயிற்சி அளிக்க முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்து  உள்ளார்.அமைச்சரின் அடுத்தடுத்த அதிரடி முடிவால், மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

click me!