அடிதூள்..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு..!மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியோ அதிர்ச்சி..!

By ezhil mozhiFirst Published Jan 30, 2019, 7:29 PM IST
Highlights

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வந்தார். அவருடைய ஒவ்வொரு திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
 

அடிதூள்..! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வந்தார். அவருடைய ஒவ்வொரு திட்டமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக புதிய பாடத்திட்டம் முதல், பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு, இலவச நீட் தேர்வு மையங்கள், தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியிலும் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் என பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில், இயற்கையை பாதுகாக்கவும் மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். அதன்படி,
 
மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண் என்ற ஆணை பிறப்பிக்கபட உள்ளது என தெரிவித்து உள்ளார். மேலும், இத்திட்டத்தின் மூலம் 2.5 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படும் என குறிப்பிட்டு உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

மேலும் மருத்துவ படிப்பில் 1000 பேர், அரசு பள்ளிகளில் இருந்து இடம்பெறுவர் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி, மக்கள்  மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

click me!