
இன்று "ஜல்லிக்கட்டு"... நாளை அரசியலில் "மல்லுக்கட்டு"..! இப்போதே பிட்டு போட்டு அதிரடி காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்...!
பொங்கல் தினத்தை முன்னிட்டு, சைதாபேட்டையில் நடைபெற்ற இலவச வேட்டி சேலை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று "ஜல்லிக்கட்டு"... நாளை அரசியலில் "மல்லுக்கட்டு" என செய்தியாளர்களிடம் இப்போதே ஒரு பிட்டு போட்டு அதிரடி காட்டி உள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையிலும் கூலாக பதில் கூறும் ஜெயக்குமார், எப்போதும் எதுகை மோனையோடு சற்று சுவாரஸ்யமாக பேசுவது வழக்கம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. கூட்டணியில் இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணன் 'தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது.பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது என சொல்ல....
அமைச்சர் ஜெயக்குமாரோ... அவர் அப்பப்ப இப்படித்தான் எதையோ பேசிகிட்டு இருப்பார்... ஆனால் நல்லா தான் இருந்தார்... இருந்தாலும் அவர் பேச்சை எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. அரசு தன் கடமையை சரிவர செய்கிறது' என கவுண்டர் கொடுத்துவிட்டார்
இந்த நிலையில் இன்று சைதாபேட்டையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இலவச வேட்டி சேலை வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட ஜெயக்ககுமாரிடம் செய்தியார்கள் கேள்வி கேட்ட போது, "இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்... தமிழர்களுக்கு அழகே வீரம் தான். அப்படிப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். எனவே இன்று ஜல்லிக்கட்டு இருக்கட்டும்; நாளை அரசியலில் மல்லுக்கட்டு' தான் என டைமிங்கில் ரைமிங்கா தெரிவித்து உள்ளார்.
அமைச்சரின் பதில் சுவாரஸ்யமாக இருங்தாலும், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 'நாளை அரசியலில் மல்லுக்கட்டலாம்' என சொன்னது இப்போதே அடுத்த பரபரப்பை கிளப்பு உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.