போகி பண்டிகைக்கு இத்தனை டன் குப்பைகளா...? இவ்வளவு நாள் எங்கப்பா வைத்த இருந்தீங்க..!?

By ezhil mozhiFirst Published Jan 15, 2020, 2:02 PM IST
Highlights

திருப்பூர் மாவட்டத்தில் போகி பண்டிகையை அடுத்து அங்கு உள்ள தொழில் வளாகங்கள் பனியன் நிறுவனங்கள் வீடுகள் என அனைவருக்கும் ஓர் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

போகி பண்டிகைக்கு இத்தனை டன் குப்பைகளா...? இவ்வளவு நாள் எங்கப்பா வைத்த இருந்தீங்க..!? 

போகி பண்டிகை எதிரொலியாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 340 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் போகி பண்டிகையை அடுத்து அங்கு உள்ள தொழில் வளாகங்கள் பனியன் நிறுவனங்கள் வீடுகள் என அனைவருக்கும் ஓர் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி உலோக கழிவு, காகிதக்  கழிவு, பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பார்த்து பிரித்து மாநகராட்சி ஊழியர்கள் வந்தால் அவர்களிடம் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன்படி பொதுமக்கள் அவர்கள் வீட்டில் இருந்த பழைய துணிகள் பொருட்கள் அதேபோன்று நிறுவனங்கள் வைத்திருந்த உலோக கழிவுகள் என அனைத்தையும் தனித்தனியாக பிரித்து சேகரிக்கப் பட்டது. அதன் மூலம் பெறப்பட்ட குப்பை கழிவுகளை 40 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. இது மொத்தம் 340 டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மறுசுழற்சி செய்து மீண்டும் விற்பனை செய்யவும், மறுசுழற்சி செய்ய  முடியாததை பல தொண்டு நிறுவனங்கள் மொல  அரியலூரில் அருகில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில்  எரிபொருள் பயன்பாட்டுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

click me!