
மேஷம் முதல் கன்னி வரை இன்றைய ராசிப்பலன்..!
மேஷ ராசி நேயர்களே..!
வெளிவட்டாரத்தில் இன்று உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பல திட்டங்களை செய்ய முற்படுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். திடீரென பயணங்களை மேற்கொள்ள கூடிய நாள் இது.
ரிஷப ராசி நேயர்களே..!
புது முடிவுகளை எடுக்கும் நாள் இது. கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடையும் நாள்.
மிதுன ராசி நேயர்களே...!
விமர்சனங்களை கண்டு சோகம் அடைய வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள் செய்யாமல் உங்களை காத்திருக்க வைப்பார்கள். சில சங்கடங்கள் ஏற்படும் நாளிது.
கடக ராசி நேயர்களே...!
செய்ய வேண்டிய ஒரு சில கடமையை நிறைவேற்ற அலைந்து திரியும் நாளிது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். யாரையும் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே.!
தவறு செய்பவர்களை துணிவுடன் கேள்வி கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் பெருமை அடையும் சிறப்பு ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே..!
உங்களுடைய எதிர்பார்ப்பு மிக எளிதில் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சிலவற்றை உங்கள் பிடித்தவர்களுக்கு வாங்கிக் கொடுப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.