மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

Published : May 17, 2019, 11:02 AM IST
மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!

சுருக்கம்

இன்றைய நாளில் மனக்குழப்பம் உங்களுக்கு நீங்கும். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் உதவி உங்களுக்கு கிடைக்கும்.எதிர்பார்த்த பண வரவு திருப்தியாக இருக்கும்.  

மேஷம்  முதல் கன்னி  வரை ராசிப்பலன்..! 

மேஷ ராசி நேயர்களே..!

இன்றைய நாளில் மனக்குழப்பம் உங்களுக்கு நீங்கும். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் உதவி உங்களுக்கு கிடைக்கும்.எதிர்பார்த்த பண வரவு திருப்தியாக இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

இன்றைய நாளில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பல்வேறு காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் உங்கள் வீடு கலகலப்பாக காணப்படும். மனைவி வழியில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

பல நாட்கள் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய பழைய நண்பர்களை திடீரென சந்திக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிட்டும். உங்கள் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முற்படுவீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

இதுநாள் வரை இருந்து வந்த பெரிய மன உளைச்சலில் இருந்து விடுபடும் நாள். இது கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்பான பல நிகழ்வுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். திடீரென வாகன பழுது ஏற்படலாம்.

சிம்ம ராசி நேயர்களே...!

ஆடம்பர செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நல்ல செய்தி உங்களுக்கு இன்று வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

அலைச்சல் இல்லாமல் சுறுசுறுப்பாக இன்றைய நாளில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். தங்களது வீட்டை விரிவுபடுத்தவும் பழைய நண்பர்களை சந்திக்கும் சிந்தனை பிறக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்