
மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்...!
மேஷ ராசி நேயர்களே..!
உங்களில் மறைந்து கிடக்கும் திறமை விரைவில் வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை படும் நாளில் இது. அவர்களை இசை நடனம் ஆகியவற்றில் பயிற்சி பெற ஆவலாக அழைத்துச் செல்வீர்கள்.
ரிஷப ராசி நேயர்களே...!
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் வந்து சேரும். ஆடை ஆபரணங்களை வாங்கி குவிக்கும் நாள் இது. பணவரவு தேவையான அளவிற்கு இருக்கும்.
மிதுன ராசி நேயர்களே...!
துரோகிகளை இனங்கண்டு அவர்களை விட்டு ஒதுங்கி வாழ முற்படுவீர்கள். அனைவரின் பாராட்டும் கிடைக்கும் நாள் இது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்.
இது கடக ராசி நேயர்களே..!
சமூகத்தில் பிரபலமாக உள்ள அவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். சில முக்கிய காரியங்கள் நடைபெறும். வாகன பராமரிப்பை மேற்கொள்ள முற்படுவீர்கள்.
சிம்மராசி நேயர்களே...!
மன உளைச்சல் டென்ஷன், சோர்வு வந்துபோகும், முன்கோபத்தை குறைத்துக் கொள்வது சிறந்தது, பிள்ளைகளின் உயர் கல்விக்காக அதிக செலவு செய்ய நேரிடும்.
கன்னி ராசி நேயர்களே...!
யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம் என்பதே உங்களுக்கு இன்றைய அறிவுரை. வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக்கொண்டு வெளியில் செல்லுங்கள். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் வரும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.