Covid: கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு...புதிய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி..! ஓராண்டுக்கு பின் மனநல பாதிக்கும்?

Anija Kannan   | Asianet News
Published : Feb 18, 2022, 02:37 PM ISTUpdated : Feb 18, 2022, 02:39 PM IST
Covid: கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு...புதிய ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி..! ஓராண்டுக்கு பின் மனநல பாதிக்கும்?

சுருக்கம்

கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு, ஓராண்டுக்கு பின் மனநல பாதிக்கும் அபாயம் இருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு, ஓராண்டுக்கு பின் மனநல பாதிக்கும் அபாயம் இருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கோரா தாண்டவம் ஆடி வரும் கொரோனாவிற்கு எதிராக,  என்ன தான் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அதை தொடர்ந்து, ஒரு சில மாதங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் டெல்டாக்ரான் என்ற பெயரில், சைப்ரஸ் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தென்படத் துவக்கியது. அதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்ட ‘நியோ கோவ்’ என்ற  கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில், பரவி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா மாறுபட்டு பல்வேறு விதங்களில் தாக்கி வருகிறது. இதில் பாதிக்கப்படும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான பின்விளைவுகளை எதிர்கொள்கின்றனர். சிலர் சுவை இழப்பு, முதுகு, மற்றும் இடுப்பில் வலி இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர். பலருக்கு முடி உதிர்தல், உடல் சோர்வு, வாசனை நுகரும் திறன் இழப்பு போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. அதேசமயம், வேறு சிலருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படுவது ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.. 

தவறான போதைப்பொருள் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் ஏற்படுவதை போன்ற கவலை, மனஅழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் போன்றவை உருவாகின்றன. குறிப்பாக, பலருக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது.

கொரோனாவால் மிகுந்த மற்றும் மிதமான பாதிப்புகளை எதிர்கொண்ட பிறகு, அதில் இருந்து குணமாகி ஓராண்டு கடந்த பிறகு இதுபோன்ற மனநல பாதிப்புகள் ஏற்படுவதாக விரிவான ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது. உலக அளவில் 14.8 கோடி பேருக்கும், அமெரிக்காவில் 2.8 மில்லியன் மக்களுக்கும் மனநல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில். எந்தவித தொற்றுகளுக்கும் ஆளாகாத மக்களுடன் ஒப்பிடுகையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 35 சதவீதம் பேருக்கு கவலையும், 40 சதவீதம் பேருக்கு மனஅழுத்தமும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மனக்கவலை மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் மருந்துகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் 41 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது. சுமார் 80 சதவீத மக்கள் நியூரோகோக்னிடிவ் என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு கொண்ட மக்களுக்கு மனக்குழப்பம், கவனச்சிதறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கொரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனிடையே, கொரோனா தொற்று பிப்ரவரி தொடங்கியதிலிருந்து மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இந்நிலையில், இந்த செய்தி மக்களை மீண்தும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்