Village fish curry: தெருவெல்லாம் மணக்கும் மீன் குழம்பு... ஒரு முறை இப்படிசெஞ்சு அசத்துங்க..!

By Anu KanFirst Published Feb 18, 2022, 12:38 PM IST
Highlights

மீன் குழம்பு வைப்பது ஒரு கலை என்பார்கள். அந்த கலையை தெரிந்து கொள்ள ஈஸியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் இன்றைய நவீன உலகில், எண்ணற்ற பல மீன் குழம்பு வெரைட்டிகளை செய்து அசத்தி வருகிறோம். அவை ஒவ்வொன்றும் பலவிதம், அரைச்சு வச்ச மீன் குழம்பு,கேரளா ஸ்டைல் மீன் குழம்பு, தேங்காய் பால் ஊற்றிய மீன் குழம்பு, சட்டி மீன் குழம்பு, சின்ன வெங்காய மீன் குழம்பு, மாங்காய் போட்ட மீன் குழம்பு என ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. 

மீன் குழம்பு வைப்பது ஒரு கலை என்பார்கள். அந்த கலையை தெரிந்து கொள்ள ஈஸியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீன் குழம்பு வச்சு அசத்துங்க, உங்கள் கணவர் உங்களையே சுற்றி சுற்றி வருவார். அதே போல் சில மீன்கள் குழம்புக்கு நன்றாக இருக்கும், சில மீன்கள் வறுத்தால் தான் ருசி தரும். அதனால் மீன் குழம்பு வைப்பதற்கு முன்பு எந்த மீனில் வைக்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் கிராமப்புறங்களில் செய்யும் மீன் குழம்பிற்கு தனி ருசி இருக்கும். அதற்கு முக்கிய காரணம் மண் பாத்திரம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

 மீன் - 1/2 கிலோ உப்பு 

சீரகம் -1 டீஸ்புன் 

மிளகு  -1 டீஸ்புன் 

உப்பு -தேவையான அளவு 

 வெங்காயம் - 12 சின்ன வெங்காயம் 

பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது.

தக்காளி - 3 (நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது) 

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

புளிச்சாறு -  இலுமிச்சை சைஸ் கரைசல் 

தேங்காய் -4 பீஸ் 

எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கையளவு 

பூண்டு - 6 பற்கள்

வெந்தயம் - 1 டீஸ்புன் 

செய்முறை:

1. முதலில் சின்ன வெங்காயம், தக்காளி -1, பூண்டு- 4பற்கள், பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் _  1டீஸ்புன் சரியான அளவில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.

2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வழக்கம் போல் நறுக்கிய வெங்காயம், வெந்தயம் -1டீஸ்புன், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3. இப்போது அதில் அரைத்து வைத்துள்ள கரைசலை சேர்த்து அது கரைந்ததும் புளி தண்ணீரை ஊற்ற வெண்டும்.

4. பின்பு மாசாவை சேர்த்து. 1-டீஸ்புன் மிளகாய் தூள், 3- டீஸ்புன் மல்லி தூள் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

5. குழம்பு கொதித்ததும் தேங்காய் பால் ஊற்ற வேண்டும். சில நிமிடங்கள் குழம்பு கொதித்ததும் மீன் துண்டுகளை அதில் சேர்த்து 5 நிமிடம் வேண்டும்.

6. இறுதியாக மீன் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் டேஸ்டியான மீன் குழம்பு  ரெடி.
 

click me!