Deltacron Virus: நான்காம் அலை வந்தாச்சா..? பிரிட்டனை மிரட்டும் டெல்டாக்ரான்....பீதியில் உறைந்த உலக மக்கள்..!

By Anu Kan  |  First Published Feb 18, 2022, 11:21 AM IST

டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில், பரவி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில், பரவி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகமே கொரோனா என்கின்ற கொடிய நோய்க்கு எதிராக போராடி மீண்டு வரும் நிலையில், நம் பாதுகாப்பாக இருப்பது அவசியம். சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், டெல்டா, டெல்டா பிளஸ்,  ஒமிக்ரான் என்று பல்வேறு விதங்களில் உருமாறி, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கொரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை எட்டியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. 

 இதனிடையே, கொரோனா தொற்று பிப்ரவரி தொடங்கியதிலிருந்து மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இதையடுத்து, தற்போது மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். அந்த நிம்மதி அடங்குவதற்குள் தற்போது,பிரிட்டன் நாட்டில் புதிதாக டெல்டாக்ரான் என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது உலக சுகாதார நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டில் இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
டெல்டாக்ரான்:

டெல்டாக்ரான் என்றால் என்ன இந்த டெல்டாக்ரான் கொரோனா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் என இரண்டு உருமாறிய கொரோனா வைரசின் பண்புகளையும் கொண்டுள்ளதாகவும் இது ஒரு கலப்பின மாறுபாடு (hybrid variant) என்றும் பிரிட்டன் நாட்டின் சுகாதார பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. டெல்டாக்ரான் உருமாறிய வைரஸ் எந்தளவு கடுமையானlது என்றோ அல்லது அதன் அறிகுறிகள் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பது பற்றியோ அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த புதிய உருமாறிய கொரோனா குறித்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?
 
ஏனென்றால், இந்தியாவில் 2ஆவது அலை மூச்சுத் திணறல் போன்றமிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல, 3ஆவது அலையில் ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவும் திறனைப் பெற்று இருந்தது. டெல்டா மற்றும் ஓமிக்ரான் என 2 உருமாறிய கொரோனாவின் திறன்களைப் பெற்று இருப்பதால் இந்த டெல்டாக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம் பிரிட்டன் நாட்டில் இதுவரை பதிவாகும் கேஸ்களை பார்க்கும்போது, ​​டெல்டாக்ரான் முந்தைய கொரோனா வகைகளைப் போலப் பேரழிவை ஏற்படுத்தாது என்றே சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெல்டாக்ரான் உருமாறிய கொரோனா முதன்முதலில் கடந்த ஆண்டு இறுதியில் சைப்ரஸில் கண்டறியப்பட்டது. சைப்ரஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் லியோனிடோஸ் கோஸ்ட்ரிகிஸ் என்பவரது குழுவே இந்த உருமாறிய கொரோனாவை முதலில் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!