Bigg Boss Ultimate elimination :பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா? வெளியேற போவது யார் தெரியுமா?

Anija Kannan   | Asianet News
Published : Feb 18, 2022, 09:45 AM ISTUpdated : Feb 18, 2022, 01:36 PM IST
Bigg Boss Ultimate elimination :பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா? வெளியேற போவது யார் தெரியுமா?

சுருக்கம்

இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் நடத்தப்பட்டால், வெளியேறப்போகும் அந்த இருவர் யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நெதர்லாந் நாட்டின் 'பிக் பிரதர்' நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. தற்போது, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில், தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.  

இந்நிலையில்,  தற்போது புதிய புதுப்பொலிவுடன், பிக் பாஸ் அல்டிமேட் என்ற வேறொரு புது நிகழ்வை தொடங்க உள்ளதாக அறிவித்தனர். மேலும் இது குறித்து பல ப்ரோமோக்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினர். இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி (Suresh chakravathy), சுஜா வருணி (suja varunee) ஆகியோர் எலிமினேட் ஆகி உள்ளனர். மீதமுள்ள 12 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில், இந்த மூன்றாவது வாரத்தில், நாமினேட் டாஸ்க் நடந்தது. அதில் யாரைக் காப்பாற்றுவீர்கள் என்ற டைட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை ரோஸ் கொடுத்து காப்பாற்றலாம். 

அந்தவகையில் அதிகமாக ரோஸ் வைத்து இருப்பவர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ரோஸ் கொடுத்த நபர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. 

அந்த வகையில் குறைந்த ரோஸ் வாங்கி இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில், நிரூப், சினேகன், ஜூலி, ஷாரிக், அனிதா, பாலாஜி முருகதாஸ், அபிநய், தாமரை உள்ளிட்ட 8 பேர் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.  

டபுள் எவிக்‌ஷன் உண்மையா?

டபுள் எவிக்‌ஷன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில், டெலிபோன் மூலம்  டபுள் எவிக்‌ஷன் நடத்தப்படும் என்று பிக் பாஸ் குரல் மூலம் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த இருவர் யார் என்கிற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

கடைசி இடத்தில் இருப்பது? 

தற்போது அன் அஃபிஷியல் வாக்குகளின் அடிப்படையில், சினேகன் ஆரம்பத்தில் கடைசி இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அபிநய் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

மேலும், இவர்கள் இருவருக்கும் குறைந்த அளவிலான வாக்கு எண்ணிக்கைகள் வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் நடத்தப்பட்டால் அபிநய் மற்றும் சினேகன் ஆகிய இருவரும் வெளியேறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், முடிவு என்ன என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?
Bread Omelette for Breakfast : காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிட்டுறது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவறங்க இதை கவனிங்க