மின்கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் "மின் இணைப்பு" துண்டிக்கப்படாது..! அமைச்சர் அதிரடி..!

By ezhil mozhiFirst Published Apr 14, 2020, 6:20 PM IST
Highlights
இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டித்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 
மின்கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் "மின் இணைப்பு" துண்டிக்கப்படாது..! அமைச்சர் அதிரடி..! 

மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசமும் மே ஆறாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளது மக்களிடையே பெருமூச்சுவிட வைத்துள்ளது.

இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டித்து மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தும் போது தெரிவித்திருந்தார்.


இந்த ஒரு நிலையில் மேலும் மக்கள் அவரவர் வீட்டில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால்  பொருளாதார பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்கள் எந்தவித இன்னல்களையும் சந்திக்காமல் இருப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்களும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு நிலையில் மின் இணைப்பு யாருக்கும் துண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டும் மின் கட்டணம் செலுத்த மே 6-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கமணி கடந்த மாதம் மின் கட்டண தொகை செலுத்தப்படவில்லை என்றாலும் கூட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் இம்மாதம் சேர்த்து கூட அடுத்த மாதம் 6 ஆம் தேத்திலுள் செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.
click me!