இதுதான் கடைசி மாருதி 800..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...! மலரும் நினைவுகள்..!

 
Published : Feb 16, 2018, 06:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
இதுதான் கடைசி மாருதி 800..!  பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...! மலரும் நினைவுகள்..!

சுருக்கம்

maruthi 800 last unit delivered

இதுதான் கடைசி மாருதி 800 - முடிவுக்கு வந்தது தயாரிப்பு 

இந்திய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கார் என்றால் அது மாருதி 800  என்றே சொல்லலாம்... அன்று முதல் இன்று வரை இந் கார் மீது  தனி கவனம் இருக்கும்  அனைவருக்குமே.....

மாருதி 800

1983-ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த மாருதி 800 காரின் கடைசி யூனிட்  அசெம்பிளி லைனில் இருந்து வெளிவந்தது.

இந்தக் கடைசி மாருதி 800,ஷில்லாங்கில் இருக்கும் ஒரு டீலர்ஷிப்புக்குச் அனுப்பப்பட்டது. இன்றுவரை கிட்டத்தட்ட 25 லட்சம் மாருதி 800 கார்கள் விற்கப்பட்டுள்ளன.

இன்னும் 10 வருடங்களுக்கு மாருதி 800 காருக்கான ஸ்பேர் பார்ட்டுகள் கிடைக்கும் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் மனதில் மாருதி 800

மாருதி 800, இந்தியர்களின் மனதில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு கார். 90-களில் பல குடும்பங்களுக்கு வீடு கட்டுவதைப் போல், மாருதி 800 காரை வாங்கிவிடவேண்டும் என்ற கனவு இருந்திருக்கும். இன்று கார் ஓட்டும் பலரும் இந்தக் காரில்தான் முதன்முதலாக கார் ஓட்டப் பழகி இருப்பர்.

இன்றளவும்  இந்த காரை ஒரு சிலர் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.தற்போது மாருதி ஆல்டோ மற்றும் K10  மாடல் கார்கள் விற்பனையில் உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்