
நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயிலை பயன்படுத்துவது வழக்கம்.அப்படி செல்லும் போது, ரயிலில் கொண்டு வரப்படும் உணவு பொருட்களை பயணிகள் நம்பிக்கையாக வாங்கி உண்பது வழக்கம்.இதற்கு முன்னதாக,சென்னையில் ஆட்டுக்கறிக்கு பதிலாக பூனை கறி விற்கப்படுவதாக செய்திகள் வெளியானது .
இதனால்,அசைவ பிரியர்கள் எந்த ஓட்டலுக்கு சென்றாலும்,அது சிக்கன் தானா ? மட்டன் தானா என இருமுறையாவது கேட்டு சந்தேகத்தை தீர்த்த பின் உண்ணும் பழக்கத்தை கொண்டு உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது ரயிலில் தயாரித்து பயணிகளுக்கு விற்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்றாலும் பரவா இல்லை.ஆனால் சுத்தமாக இருந்தாலே போதும் என நினைத்து நம்பி வாங்குபவர்களுக்கு காத்திருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்.
காலால்ர மிதிக்கப்படும் உளை க்கிழங்கு
ரயில்வே ஊழியர் ஒருவர்,உணவு தயாரிக்கும் பெட்டியில் உருளை கிழங்கை தன் காலில் மிதித்து, அதனை பொடியாக்குகிறார்.
வேக வைத்த உருளை கிழங்கை,தோல் உரித்துவிட்டு அதனை வெறும் கால்களால் மிதிக்கும் காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது
இதை பார்த்த சக பயணிகளில் ஒருவர் இதனை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.இதனை கண்ட பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.