valentines day: காதலர்களே..! காதலுக்கு உகந்த மந்திரங்கள்...செல்ல வேண்டிய கோவில்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க...

Anija Kannan   | Asianet News
Published : Feb 14, 2022, 09:48 AM IST
valentines day: காதலர்களே..! காதலுக்கு உகந்த மந்திரங்கள்...செல்ல வேண்டிய கோவில்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க...

சுருக்கம்

காதலர்களே, உங்கள் காதலை சொல்வதற்கு முன்பாக இந்த மந்திரங்களை 10 முறை சொன்னால், உங்கள் காதல் கைக்கூடும். திருமண யோகம் கிடைக்கும். இந்த மாதம் நல்ல செய்தி உங்கள் காதுக்கு வரும்.  

காதலர்களே, உங்கள் காதலை சொல்வதற்கு முன்பாக இந்த மந்திரங்களை 10 முறை சொன்னால், உங்கள் காதல் கைக்கூடும். திருமண யோகம் கிடைக்கும். இந்த மாதம் நல்ல செய்தி உங்கள் காதுக்கு வரும்.  

பிப்ரவரி  14ஆம் தேதி இன்று, உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்த நாட்களின் காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்த, திருமணத்திற்கு தயாராக சிறந்த நாளாக கருதுவர். 

எனவே, கீழ்க்காணும் மந்திரத்தை சொல்லி வந்தால் வந்தால், உங்கள் காதல் கைக்கூடும். திருமண யோகம் கிடைக்கும். இந்த மாதம் நல்ல செய்தி உங்கள் காதுக்கு வரும்.  

ஓம் நமோ பகவதே வாசுதேவாய|

தன்வந்திரியே |

அமிர்தகலச ஹஸ்தாய |

சர்வ ஆமய நசனாய|

த்ரைலோக்ய நாதாய |

ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா|| 

வணங்க வேண்டிய கோவில்கள்:

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்:

சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25 வது தேவாரத்தலம் ஆகும். திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோவில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து, உங்கள் காதல் கைகூடும் திருமணம் உடனே நடந்து விடும் என்பது ஐதீகள். 

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில்:

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். குறிப்பாக பெண்கள் காதல் கைகூட அங்கிருக்கும் மன்மதனின் சிலைக்கு அபிஷேகம் செய்து இன்று வழிபட்டால் நல்லது. அதேபோல ஆண்கள் ரதியின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தங்கள் விருப்பம் நிறைவேறி திருமணமானவுடன் தம்பதிகளாக மீண்டும் அங்கு வந்து வழிபாடு செய்யவேண்டும் என்பதும் நியதி.

காதல் கைகூட வரமருளும் மரங்கள்:

கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது பட்டீஸ்வரம். பட்டீஸ்வரம் துர்கை அம்மன் கோயிலில் தலவிருட்சமாக விளங்குவது வன்னிமரம். இங்கு இரு வன்னி மரங்கள் உள்ளன. ஒரு வன்னிமரத்தின் கீழ் மற்றொரு மரம் வளராது என்கின்றனர். ஆனால் இங்கு இரண்டும் வளர்ந்து நிற்கின்றன. இங்கிருக்கும் ஒரு மரத்தில் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை நினைத்து மஞ்சள் கயிறு கட்டினால் விரைவில் அந்தக் காதல் வெற்றியடைந்து பெற்றவர்களின் சம்மதத்தோடு திருமணம் கைகூடும் என்கின்றனர். மற்றொரு மரத்தில் கயிற்றினைக் கட்ட குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். 


 
அய்யம்பேட்டை ஸ்ரீவைகுண்டநாராயண பெருமாள்: 

பிற்காலச் சோழர்களின் காலத்தைச் சேர்ந்த அய்யம்பேட்டை ஸ்ரீவைகுண்டநாராயண பெருமாள் திருக்கோயிலில் ஒரு சிறப்புப் பிரார்த்தனை உண்டு. காதல் கைகூடிட இங்கு ஒரு வேண்டுதல் செய்யப்படுகிறது. காதலில் பிரச்னை ஏற்படுமாயின் எலுமிச்சைப் பழம் ஒன்றை இங்குள்ள பெருமாள் காலடியில் வைத்து உரிய மூலமந்திரம் சொல்லி அர்ச்சிக்கின்றனர். பின்னர் பழத்தைப் பிழிந்து சாறை அருந்தினால் அவர்களது வேண்டுதல் நிறைவேறிக் காதல் கைகூடும் என்று நம்புகின்றனர். இதைப் பிரிந்திருக்கும் தம்பதிகள் செய்ய பிரிந்துசென்றவர் மனம் மாறி ஒன்றிணைவர். எனவே, மேற் கூறிய கோவில்களில் வழிபட்டு, உங்கள் காதல் வெற்றி பெற்று திருமணம் கைகூட வாழ்த்துக்கள்!
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்