Mango Tips : இனியும் ஏமாறாதீங்க! மாம்பழத்தை இப்படி பார்த்து வாங்குங்க.. போலி மாம்பழம் இப்படி தான் இருக்கும்!

Published : Apr 15, 2024, 11:15 AM ISTUpdated : Apr 15, 2024, 11:28 AM IST
Mango Tips : இனியும் ஏமாறாதீங்க! மாம்பழத்தை இப்படி பார்த்து வாங்குங்க.. போலி மாம்பழம் இப்படி தான் இருக்கும்!

சுருக்கம்

இயற்றை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை நீங்கள் எளிதாக  கண்டுபிடிக்க சில உதவி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை

'மாம்பழம்' எந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமே பெரும்பாலான மக்கள் கோடைக்காக காத்திருந்தனர். மாம்பழத்தின் பெயரை கேட்டாலே பலரது வாயில் எச்சில் வடியும். இது பழங்களின் ராஜா என்று கூட அழைக்கப்படுகிறது. 

ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாம்பழத்தை விரும்பினாலும் பலர் மாம்பழத்திலிருந்து விலகி இருக்க தொடங்கி விட்டார்கள். அதற்கு காரணம் இதில் உள்ள பல வகையான ரசாயனங்கள் தான். மார்க்கெட்டில் பல இடங்களில் அதன் விற்பனை மற்றும் தேவைக்காகவும், அதிக லாபத்திற்காக மாம்பழங்களை ரசாயனம் கலந்து விற்பனை செய்கின்றன. இது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுகிறது. இதனால் தான் தற்போது மக்கள் பலர் மாம்பழம் வாங்குவதை தவிர்க்க தொடங்கி உள்ளனர். மேலும், ராசயனம் உள்ள மாம்பழத்தை வாங்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.

இந்த கட்டுரையில், உண்மையான மற்றும் இரசாயனத்தில் பழுத்த மாம்பழங்களை நீங்கள் எளிதாக  கண்டுபிடிக்க சில உதவி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது அதை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உண்மையான மற்றும் போலி மாம்பழங்களை எவ்வாறு கண்டறிவது?

 மாம்பழத்தின் வண்ணம்: செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் தோளில் ஆங்காங்கே பச்சை நிறம் தெரியும். ஆனால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் இப்படி இருக்காது மற்றும் சீரான மஞ்சள் நிறமும் இருக்காது. ஆனால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் மஞ்சள் நிறம் வெளிரென இருக்கும்.

மாம்பழ சாறு: செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் சாறு மிக குறைவாகவே இருக்கும் அல்லது வரவே வராது. ஆனால் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் அப்படியல்ல. சாறு அதிகம் இருக்கும். காரணம் எத்தலின் என்னும் ரசாயனம் தான்.

இதையும் படிங்க:  மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய..?

தண்ணீரில் போடவும்: நீங்கள் கடையில் இருந்து மாம்பழத்தை வாங்கி வந்த உடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் மாம்பழத்தை போடுங்கள். இயற்கை முறையில் பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கி அடியில் போய்விடும். ஆனால் மாம்பழம் மேலே மிதந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் ஆகும்.

மாம்பழத்தை அழுத்தி பார்த்து வாங்கவும்: மாம்பழத்தை வாங்கும்போது லேசாக அளித்தி பார்க்கும் போது அது மென்மையாக இருந்தால், அது இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் என்று அர்த்தம். அதே சமயம் மாம்பழம் அழுத்தும்போது சில இடங்களில் கடினமாக இருந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் ஆகும்.

இதையும் படிங்க: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் மாம்பழம் சாப்பிடலாமா? அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானதா

சுவை: செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடும் போது கொஞ்சம் வாழ்வில் அல்லது உதட்டில் எரிச்சல் ஏற்படும். அதே சமயம், இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் இப்படி ஏதும் இருக்காது.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் தீங்குகள்:
இரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உதாரணமாக.. வயிற்று வலி தலைவலி வாந்தி போன்ற பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இது தவிர மாம்பழத்தில் உள்ள ரசாயனம் உங்கள் கண்பார்வையை பெரிதும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாக, ஹைபோ தைராய்டு, நீரிழிவு நோய், கர்ப்பப்பை பிரச்சனை, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வர வாய்ப்புள்ளது.. முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு குழந்தைங்களுக்கு பால் கொடுத்தால் அது குழந்தைகளின் உடல்நிலையை மோசமாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Push-Ups : இந்த '1' உடற்பயிற்சியை தினமும் காலைல பண்ணாலே 'உடலில்' பல மாற்றங்கள் வரும்
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!