சென்னை பூங்காவில் காதலர்கள் மாறி மாறி கத்திக்குத்து..! பதறி ஓட்டம் பிடித்த மக்கள்..!

 
Published : Feb 20, 2018, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
சென்னை பூங்காவில் காதலர்கள் மாறி மாறி கத்திக்குத்து..! பதறி ஓட்டம் பிடித்த மக்கள்..!

சுருக்கம்

lovers did fight and admitted in hospital in chennai

சென்னை பூங்காவில் காதலனும் காதலியும் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சென்னையில் காதலனும்,காதலியும் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில்,சென்னையில் உள்ள உயரமான பூங்கா கோபுரமான அண்ணா நகர் டவர் பூங்காவிற்கு காதல் ஜோடிகள் வந்துள்ளது.

இந்த பூங்காவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்லும் ஒரு தளமாக இந்த பூங்கா விளங்குகிறது.

இந்நிலையில்,இன்று மதியம் இங்கு வந்த காதல் ஜோடி ஒன்று,வந்து சில நிமிடத்தில் ஒருவரை ஒருவர்  மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர்,அவர்கள் இருவரையும்,அண்ணா நகரில் உள்ள சௌந்தரபாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டபகலில் காதலர்கள் இருவரும் மாறி மாறி பொது இடத்தில் குத்திக்கொண்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.     

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்