சென்னையில் பானி பூரி..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

 
Published : Feb 20, 2018, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
சென்னையில் பானி பூரி..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

சுருக்கம்

paani poori mixing with kutka in chennai

சென்னையில் பானி பூரி..! ஓர் அதிர்ச்சி புகார்..!

சென்னையில் எங்கு பார்த்தாலும்,பானி பூரி கடை பெருகி இருப்பதை பார்த்திருக்க முடியும்..பெரிய பெரிய ஷாப்பிங் மால் முதல் ரோட்டு ஓர கடை வரை பானி பூரி  விற்பதை எளிதில் பார்க்க முடியும்...

மக்கள் விரும்பும் பானிபூரி

பொதுவாகவே இளம்  தலைமுறையினர் பானி பூரியை அதிகம் விரும்பி எடுத்துக் கொள்கின்றனர்.அது எந்த அளவிற்கு சுகாதாரமாக செய்யப்பட்டு உள்ளது, நம் உடலை நலத்திற்கு  நல்லதா அல்லது கெடுதலா என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல்  அதிக அளவில் உண்கின்றனர்

இதனை ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் சமீபத்தில் இது குறித்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

பானி பூரியில் கலக்கப்படும் பான் மசாலா குட்கா.....

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் பானி பூரி மட்டுமில்லாது,அதில் பாண் மசாலா குட்கா உள்ளிட்டவற்றை கலப்பதால் ஒரு விதமான விறுவிறுப்பு உள்ளது என்ற குற்றசாட்டை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

பானி பூரியில்,வைக்கப்படும் புதினா ரசம்,உருளைக்கிழங்கு பட்டாணி வெங்காயம்  கலந்த கலவை தூய்மையானதாக இல்லை என்றும்,இந்த புதினா ரசத்தில் ஒரு விதமான விறு விறுப்பு உள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கடந்த இரண்டு நாட்களாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள்,சென்னையை சுற்றயுள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பல முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் உண்பண்டங்கள்,சரியான முறையில் சுத்தம் செய்யாத புதினா ரசம் உள்ளிட்ட  பலவற்றை கால்வாயில் கொட்டப் பட்டது.

மேலும், இது குறித்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மேலும் சோதனை  செய்த பல கடைகளின்  உரிமையாளருக்கு எச்சரிக்கை  விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்