புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுத ஆலோசனை..! கல்விமுறையில் அடுத்தடுத்த அதிரடி..! மாணவர்கள் பயங்கர மகிழ்ச்சி..!

By ezhil mozhiFirst Published Jun 13, 2019, 1:24 PM IST
Highlights

11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முறைகளில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது தமிழக அரசு. அதன் படி, இதற்கு முன்னதாக இருந்த 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடத்தை மட்டும்  கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு  தேர்வு முறைகளில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது தமிழக அரசு.  அதன் படி, இதற்கு முன்னதாக இருந்த 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடத்தை மட்டும் கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
 
தமிழ் ஆங்கிலம் கணிதம் வேதியியல் இயற்பியல் உயிரியல் என இருக்கும் 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது மருத்துவம் படிக்க உள்ள மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாட பிரிவும், பொறியியல் படிக்க உள்ள மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட பிரிவும் படிக்க வேண்டி இருக்கும்.

மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு  தேர்வின் போது புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுத அனுமதிக்கலாம் என்ற ஆலோசனையும் இடம் பெற்று உள்ளதால் மாணவர்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல், பத்தாம் வகுப்பு தமிழ் ஆங்கிலம் பாடத்திற்கு ஒரு தாள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதால் தேர்வு அட்டவணை வெளியாகவில்லை என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது பற்றி மாணவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதிலும் குறிப்பாக, பள்ளிகளைவித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி மாற்றத்தை பள்ளிக்கல்வித்துறையில் கொண்டுவந்து மாணவர்கள் மற்றும்  பொதுமக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்து உள்ளார் செங்கோட்டையன். இவருக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரு மதிப்பு கூடி வருகிறது.

click me!