மாலை நேர ஸ்நாக்ஸ் வீட்டிலேயே செய்யலாம் வாங்க .....சீஸ் - கார்ன் கச்சோரி

 
Published : Mar 02, 2017, 04:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
மாலை நேர ஸ்நாக்ஸ்  வீட்டிலேயே  செய்யலாம் வாங்க .....சீஸ்  - கார்ன் கச்சோரி

சுருக்கம்

let we prepare the evening snaks in home itself

 சீஸ் - கார்ன் கச்சோரி

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கச்சோரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.  சீஸ், கார்ன் வைத்து கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா - இரண்டு கப்
சீஸ் - 2௦௦ கிராம்
ஸ்வீட் கார்ன் - இரண்டு கப்
இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்
கரம் மசாலா - இரண்டு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

ஸ்வீட் கார்னை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

சீஸை துருவிக் கொள்ளவும்.

மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து, (சப்பாத்தி மாவு பதத்தில்) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, அரைத்த கார்ன், உப்பு சேர்த்து வதக்கவும்

அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும். மசாலா நன்றாக ஆறியதும் அதில் துருவிய சீஸை சேர்த்து கிளறவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை பூரியாக திரட்டி, கார்ன் கலவையை நடுவில் வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த கச்சோரிகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் கார்ன் கச்சோரி ரெடி.

இது போன்று  பல  வகையான  ஸ்நாக்ஸ்  செய்து கொடுத்தால்  குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும்  விரும்பி இதனை  சாப்பிடுவார்கள் .

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்