கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கலை சமாளிப்பது எப்படி..?

Asianet News Tamil  
Published : Mar 02, 2017, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கலை சமாளிப்பது எப்படி..?

சுருக்கம்

How to deal with the problem occurs during pregnancy

ஹோர்மோனல்  மாற்றம்

ஹார்மோன் மாற்றத்தால் கர்ப்ப காலத்தில், தாய்மார்கள் சில  மாற்றத்தை அடைவது வழக்கம். கர்ப்பம் தரித்ததும் பெண்களுக்கு சாதரணமாகவே  ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோனை சுரக்க ஆரம்பிக்கிறது.குறிப்பாக  இரட்டை குழந்தைகள் என்றால் ஹெச்.சி.ஜி சுரப்பு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மயக்கம்  வாந்தி  உள்ளிட்ட அனைத்து  பிரச்னையும்  சந்திக்க நேரிடும்

உணவு உட்கொள்வதில் மாற்றம்

வயிறு நிறைய சாப்பிட முயற்சிக்க கூடாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட பழகி கொள்ள  வேண்டும்

இஞ்சி

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவில் காரம், கொழுப்பு சத்துகள் கொண்ட எண்ணெய் பழகாரங்கள் போன்ற பதார்த்தத்தை குறைத்துக்கொள்வது நல்லது.இல்லையென்றால், குமட்டல், வாந்நியை ஏற்படுத்தக்கூடும்

மாத்திரையால் ஏற்படும் குமட்டல்

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சில வைட்டமின் மாத்திரைகளை காலையில் உட்கொள்கிற போது சிலருக்கு குமட்டல் இன்னும் மோசமாகலாம். இவர்கள் மாத்திரையை எடுத்துக்கொண்டதும் சொக்லெட் சாப்பிடலாம். இதனால் குமட்டல் குறைய வாய்ப்புண்டு.

தண்ணீர் கட்டுப்பாடு

வயிறு நிறைய தண்ணீர் குடிக்கக்கூடாது. போதுமான அளவு மட்டுமே தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடியுங்கள். நாள் முழுவதும் திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ளுங்கள். சாப்பாட்டின் போது தண்ணீர் குடிக்க வேண்டாம்

தர்பூசணி

தர்பூசணியும் குமட்டலுக்கு நிவாரணம் தரும். சாப்பிட்டதும் படுக்ககூடாது. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் 

மருத்துவரிடம்  ஆலோசனை

வாந்தி அதிகம் இருந்தால் உண்ணும் உணவை தங்கவிடாமல்,ஊட்டச்சத்து கிடைப்பது குறைந்து போய் குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். குறிப்பாக உணவில் சிறு சிறு மாற்றத்தை கொண்டுவந்தாலே போதும் . 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!