100 வருட பழமையான முட்டை..! ரசித்து ருசித்து சாப்பிட்ட லேடி...வைரல் வீடியோ..!!

By Anu KanFirst Published Feb 10, 2022, 12:54 PM IST
Highlights

சீனாவில் 100 வருட பழமையான முட்டையை பெண் ஒருவர் ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் 100 வருட பழமையான முட்டையை பெண் ஒருவர் ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படியான ஒரு நிகழ்வு, ஆசியாவில் தற்போது நிகழ்ந்துள்ளது. 

ஆம், ஆசியாவில் 100 வருட பழமையான முட்டையை பெண் ஒருவர் ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த முட்டை 100 வருட காலம், சுண்ணாம்பு, கார உப்பு, களிமண், சாம்பல் போன்ற பொருட்களை வைத்து பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தனித்துவமான சுவையானது ஆசிய உணவு வகைகளில் மிகவும் பொதுவான அம்சம். மேலும், இந்த  முட்டையின் வெள்ளைக்கரு அடர் பழுப்பு மற்றும் ஜெலட்டினஸ் நிறத்தில் இருக்கும் அதே வேளையில் முட்டையின் மஞ்சள் கரு கரும் பச்சை மற்றும் கிரீம் போன்றது என்று என்று அந்த ஆசிய பெண் விவரிக்கிறார்.

இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், முட்டை ஓடு இன்னும் வெள்ளை நிறத்தில் உள்ளது மற்றும் முட்டையின் உட்புறத்திலும்  மஞ்சள் நிறம் உள்ளது. இந்த நூற்றாண்டு கால முட்டைகள், சமீப காலம் வரை நாம் அறிந்திராத ஒரு கண்கவர் கண்டுபிடிப்பாகும். 

இதனை பற்றி மேலும் அறிய வேண்டுமா? கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ashley (@ashyi)

இந்த வீடியோவை பார்த்த, நெட்டிசன்கள் பலர், என்னது  100 வருடங்கள் பழமையான முட்டையா..? 

அது எப்படி சுவையாக இருக்கிறது, அதன் நிறத்தால் வாசனை வருகிறதா? இதை சாப்பிட உங்களுக்கு பயமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிலர் இந்த முட்டைகளை வெவ்வேறு வழிகளில் சாப்பிடுவதற்கான பரிந்துரைகளை தெரிவித்து வருகின்றனர்.  

இந்த 100 ஆண்டுகள் பழமையான முட்டை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
 

click me!