ஒரு குவாட்டர் எடு தம்பி...! மதுக்கடையில் பாட்டிமார்கள் அட்டூழியம்..!

By ezhil mozhiFirst Published May 7, 2019, 2:46 PM IST
Highlights

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது கடைக்கு சென்று மது வாங்கி அருந்தும் சம்பவத்தை பார்க்கும்போது பொதுமக்கள் வாயடைத்து போகின்றனர்.

ஒரு குவாட்டர் எடு தம்பி...! 

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது கடைக்கு சென்று மது வாங்கி அருந்தும் சம்பவத்தை பார்க்கும்போது பொதுமக்கள் வாயடைத்து போகின்றனர்.

ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பெண்கள் கூட்டம் அவ்வப்போது சென்று மது வாங்கி அருந்துகின்றனர். இது குறித்து அங்குள்ள ஒரு சில சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் போது, "பெண்கள் என்றால், டாஸ்மாக் கடைகளுக்கு போகவே மாட்டார்கள். மது அருந்த மாட்டார்கள் என்பது தான் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சிட்டியில் வாழக்கூடிய இளம் பெண்கள் ஸ்டைல் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்து மது அருந்துவதும் சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்னொருபுறம் ஏதாவது ஒரு இடத்தில் மதுக்கடை திறக்கும் போது அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதையும் கேட்கமுடிகிறது. ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி பெண்களே பட்டப்பகலில் பங்குனி வெயில் என்று கூட பார்க்காமல் மது கடைக்கு வந்து மது வாங்கி சென்று அருந்துகின்றனர். ஆம் இதைக் கேள்விப் படும்போது ஆச்சரியப்படுவதா?அல்லது கலாச்சார சீர்கேடா? என்ற பாணியில் பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் பரவலாக வருகிறது.

இன்னொரு புறம் பெண்கள் மது அருந்தக்கூடாதா... பெண்கள் மது கடைக்கு செல்லக்கூடாதா ? என பெண்ணியவாதிகளும் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். பெண்கள் மது அருந்துவது கலாச்சார சீர்கேடு என்றால் ஆண்கள் மது அருந்துவது சரிதானா ? என்ற கேள்வியும் எழுகிறது. இன்னொரு பக்கம் இதெல்லாம் எங்கே போய் முடியப்போகிறது என்ற எண்ணம் இந்த செய்தியைப் பார்க்கும்போது அனைவருக்குள்ளும் ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது.

click me!