
கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரணம் அந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதே.
பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் ஆண்டுக்கு ஆண்டு வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆண்டும் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கத்திரி வெயில் தொடங்கும் முன்பே கோடை வெயில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இப்போதே தண்ணீருக்காக குடங்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடிக்க செல்கின்றனர் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தண்ணீருக்கு கடும் பஞ்சம் ஏற்படும் என்பது உறுதி
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.