
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பள்ளி ஆய்வக உதவியாளர் பணித் தேர்வுக்கான முடிவுகள் மாவட்டவாரியாக http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியானது.
அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4000-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப, அதாவது லேப் அசிஸ்டென்ட் பணிகளுக்காக 2015-ம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைப்பெற்றது இந்த தேர்வை 8 லட்சத்திற்கு மேற்ப்பட்டோர் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இருந்தாலும் சில பல சிக்கல் ஏற்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் அரசுக்கு இடைஞ்சல் எற்பட்ட்டது. இந்நிலையில் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கடந்த வாரம் செய்திகள் வெளியானது . இதனை தொடர்ந்து தற்போது பெரிதும் எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
லேப் அசிஸ்டென்ட் பதவிக்கான தேர்வு முடிவுகளை மாவட்டவாரியாக http://dge.tn.gov.in , http://dge1.tn.nic.in மற்றும் http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.