விமானங்களில் இலவச வைபை....ஏர் இந்தியா அதிரடி ....

 
Published : Mar 22, 2017, 12:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
விமானங்களில் இலவச வைபை....ஏர் இந்தியா அதிரடி ....

சுருக்கம்

free wifi in air india

இன்டர்நெட் இல்லாத வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியாது. கொஞ்சம் நேரம் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை  பயன் படுத்த முடியவில்லை என்றால்  அந்த  அளவுக்கு  டென்ஷன்  ஆகும்.

இது போன்ற விஞ்ஞான உலகில் வாழும் நமக்கு, விமானத்தில் பறந்தாலும்  இன்டர்நெட் வசதி பயன்படுத்தும் வாய்ப்பை தற்போது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, தனது ஏ-320 ரக விமானங்களில் வைபை வசதி இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை வேறு எந்த விமான நிறுவனமும்  வைபை  சேவையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விமானங்களில் முதன் முறையாக இலவச வைபை சேவைவையை வழங்கும் நிறுவனமாக ஏர்இந்தியாக தேர்வாகி உள்ளது

இந்த சேவையானது வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைவர் அஸ்வானி லோகானி தெரிவித்துள்ளார்.

மேலும் விமானத்தில் பறக்கும் போது, எந்த அளவிற்கு ஒருவர் டேட்டா பயன்படுத்த முடியும், எத்தனை ஜிபி வழங்கப்படும் என்பது போன்ற எந்த முழுவிவரமும்  இதுவரை வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்