பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு 90 நாள் சம்பளத்துடன் விடுமுறை...! மத்திய அரசு உத்தரவு

First Published Mar 21, 2017, 11:29 AM IST
Highlights
90 days leave for sexually abused women


மத்திய  அரசு ஊழியர்கள் என்றாலே  பல சலுகைகள் உண்டு  மற்றும்  சம்பளமும்  அதிகம் . அதற்காகவே  பெரும்பாலான  மக்கள்  அரசு  வேலை கிடைக்குமா  என்பதில் அதிக ஆர்வம் காட்டுவர் . அந்த வகையில் பெண்களுக்கென  சிறப்பு சலுகை பல உள்ளது . அதில்  தற்போது  எதிர்பார்க்காத சலுகை ஒன்று அறிவித்துள்ளது மத்திய அரசு.

அதன்படி,  மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் , பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால்,  வர்களுக்கு 9௦ நாட்கள்  விடுமுறை அளிப்பதுடன் ஊதியமும் வழங்கப்படும் மத்திய  அரசு தெரிவித்துள்ளது .

ஏன் இந்த முடிவு ?

பாலியல்  கொடுமைக்கு ஆளானவர்கள் ,ஒரு சில அச்சுறுத்தல்கள்  இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.  இதன் காரணமாக தற்போது பெண்களுக்கு சிறப்பு விடுமறை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .

பிரச்னை எதிர்கொள்வது எப்படி ?

பெண்கள் பாதுகாப்பாக எப்படி இருப்பது, பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது  என்பது குறித்த விழிப்புணர்வு குறித்த வழிமுறைகள் கடந்த டிசம்பர் மாதத்தில், வழங்கப்பட்டது. இதன்படி  பாலியல்  வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் குறித்த மனநிலைமை,பாதுகாப்பு, உள்ளிட்ட அம்சங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த மாதாந்திர அறிக்கையை  அனைத்து அமைச்சகங்களும்  கண்காணித்து சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதே போன்று பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் புகார் தெரிவித்த நாளில் இருந்து 15 நாட்களுக்குள்  விசாரணையை  முடித்து வைக்க தன் நிறுவன மேலாளரிடம் கோரிக்கை வைக்கலாம்  எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிக பட்சமாக ஒரு மாத  காலத்திற்குள் விசாரணை நடைபெற்று முடிக்க வேண்டும் என்றும் , பாதிக்கப் பட்ட பெண் 9௦ நாட்களுக்கு சம்பளத்துடன்  கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்  என  தெரிவிக்கப் பட்டுள்ளது.

click me!