பழைய சோறும்... மாங்காய் நசுக்கலும் ..தெரியுமா உங்களுக்கு ..?

 
Published : Mar 20, 2017, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பழைய சோறும்... மாங்காய் நசுக்கலும் ..தெரியுமா  உங்களுக்கு ..?

சுருக்கம்

water rice with mango pickles

கோடை வெயில்  தொடங்கியது. தண்ணீர்  இல்லாமலும், கொடை இல்லாமலும் வெளியில் செல்வது  கடினமான  ஒன்று.

ஆங்காங்கு  கஞ்சி கூழ் என  விற்பனையும்  தொடங்கிவிட்டது . இந்நிலையில் பீட்சா  பர்கர்  என வெட்டி ஆடாம்பர வாழ்க்கைக்கு  மாறுவது போல  சீன்  போட்டுக்கொண்டு கண்டதை  உண்பது  என்ற பழக்கம்  நம்  மக்களிடம்  கொஞ்சம்  வேரூன்றி உள்ளது .

எனவே இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய நல்ல குறிப்பு ஒன்று உள்ளது . மேல் குறிப்பிட்ட பீட்சா  பர்கர்  போன்ற உணவு  பண்டத்தை உண்ணும்  மாடர்ன் வாதிகளே....இது உங்களுக்கு தான். கோடை காலமோ ஆரம்பித்து  விட்டது. வெயிலின்  தாக்கமும் அதிகமாக உள்ளது

பீட்சா  பர்கர்  அனைத்தும்  நம் உடலுக்கு  எந்த விதத்திலும்  நல்லது கிடையாது .அதுவும்  இந்த  காலக்கட்டத்தில்  உண்டால் உடல் மேலும்  உஷ்ணம்  தான்  அடையும் . அதற்கு மாறாக  நம் முன்னோர்கள் மேற்கொண்ட அருமையான  அமிர்தம்  என்ன  என்பதை பார்க்கலாம் .

பழைய சாதம் :

 இரவில்  மீதமிருக்கும் சாதத்தில்  தண்ணீர் இட்டு  வையுங்கள் . காலையில்  எழுந்தவுடன்  அதனுடன்  தயிர் சேற்று  நன்கு கைகளால்  பிசைந்து , அதில்  வேண்டுமென்றால்  சிறிது வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாங்காய்  நசுக்கல்

பழைய  சாதம் சரி. அது என்ன மாங்காய் நசுக்கல் என  நினைக்க தோன்றுகிறதா ? அமாம். மாங்காய் நசுக்கல்  என்றால், மாங்காயை  கட்  செய்து , நம்வீட்டில் உள்ள அம்மிக்கல் என கூறப்படும் அரவை கல்லில்,போதுமான அளவு காய்ந்த  மிளகாய் மற்றும் உப்பு  வைத்து நன்கு அரைத்து விட்டு , பின்னர் கட்  செய்த  மாங்காயை அதில்  வைத்து  தன் கைகளால் அந்த  கல்லை பயன்படுத்தி அரைக்கவும். (மாவு போல அரைக்க  கூடாது )

பழைய சோறும்  மாங்காய்  நசுக்களும்  ரெடி ,..... கோடை வெயிலுக்கு  ஏற்ற அமிர்தம்  இதுதான் ... கோடைக்கு மட்டுமில்லை  எந்த காலத்திற்கும் ஏற்ற ஒருஉணவு வகை இது  என்பது  குறிப்பிடத்தக்கது .

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்