
கல்வி என்பது இன்று வியாபாரமாகி விட்டது. வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள தான் இன்று எத்தனையோ பிரபலமான தனியார் பள்ளிகள் பகுதி வாரியாக தங்கள் பள்ளியின் கிளையை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.
பெயர் பெற்ற பள்ளிகள் என்பதால் , அது ஒன்று போதுமே கல்வி என்ற பெயரில் கொள்ளை அடிப்பதற்கு. மக்கள் பொதுவாகவே நம் பிள்ளைகள் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமென்றாலும் தர மனதார தயாராகி விட்டனர் . இதனை தெரியாதவர்களா கல்வி கொள்ளையர்கள் .
ஜூன் மாதம் எல்கேஜி அட்மிஷன் 6 மாதத்திற்கு முன்பே முடித்து விடுகின்றனர். அதாவது வரும் ஜூன் மாதம், பள்ளியில் சேர்வதற்கு கடந்த ஜனவரி மாதமே அட்மிஷன் முடிந்துள்ளது . ஒரு சில பள்ளியில் இந்த மாதத்துடன் முடிகிறது .
குறைந்த பட்சம் 5௦ ஆயிரத்திற்கு மேல் தான் அட்மிஷன் பீஸ். இதையும் தாண்டி நம் குழந்தைக்கு சீட் கிடைக்கவில்லையே என கவலையில் உள்ளனர் சில பெற்றோர்கள்.
சற்று சிந்தித்து பாருங்கள், திறமை உள்ள குழந்தை எங்கிருந்தாலும் கற்றுகொள்ளும் விழித்துக்கொள்ளும். தரமானதாகவும் , குறைந்த கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் எத்தனையோ இருக்கும்போது , அதிக கட்டணம் வசூலித்து கல்வியை வியாபராம் செய்யும் பள்ளியில் தான் தரம் இருக்கும் என நினைக்க வேண்டாமே...யோசித்து முடிவெடுங்கள்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.